தேசிய பத்திரிகை தின வாழ்த்துக்கள் மற்றும் திராவிட மாடல் மாண்புமிகு மக்கள் முதல்வர் மு .க .ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறார் சமூக சிந்தனையாளர் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி

தேசிய பத்திரிகை தின வாழ்த்துக்கள் மற்றும் திராவிட மாடல் மாண்புமிகு மக்கள் முதல்வர் 
மு .க .ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறார் சமூக சிந்தனையாளர் பேராசிரியர்.
முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது

 தேசிய ஜனநாயக நாட்டை இயக்க, 4 தூண்கள் விவரிக்கப்பட்டுள்ளன, அவற்றில் ஊடகம் அல்லது பத்திரிகையும் ஒன்று. ஊடகங்கள் அல்லது பத்திரிக்கைகள் எந்த பிரச்சனைகளை விவாதிக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதற்கும், சமூகம் மற்றும் அரசியலில் மக்களை தீவிரமாக ஈடுபட வைப்பதற்கும் பொறுப்பாகும். ஒவ்வொரு ஆண்டும், பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவை கவுரவிக்கும் வகையில், நவம்பர் 16 ஆம் தேதி, நாட்டில் தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது. பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா இந்தியாவில் ஊடகங்களுக்கான தொழில்முறை தரநிலைகளை வெளியிடும் கட்டுப்பாட்டாளராக செயல்படுகிறது. இது பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாப்பதையும், இந்தியாவில் பத்திரிகை தரத்தை ஒழுங்குபடுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 


நாட்டில் பத்திரிகைகளின் கொள்கைகளையும் சுதந்திரத்தையும் காப்பாற்ற, 1956 இல் முதல் பத்திரிகை ஆணையம் ஒரு குழுவை அறிவித்தது. அவர்களின் முயற்சியால் 10 ஆண்டுகளுக்க பிறகு 1966 ல் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நிறுவப்பட்டது. பத்திரிக்கை சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும், பத்திரிகை தரங்களை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் இந்திய பத்திரிகையாளர்கள் முன் வர வேண்டும்.

 குறிப்பாக தமிழகத்தில் அதிகப்படியான செய்தி நாளிதழ்கள் உள்ளன. அதிலும் வார இதழ்கள், புலனாய்வு வார இதழ்கள் என தமிழகத்தில் தேசிய அளவில் பத்திரிக்கை செய்தியில் தமிழகம் முன் உதாரணமாக விளங்கிக் கொண்டிருக்கிறது. திராவிட மாடல் மாண்புமிகு மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் தமிழகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு என தனி வாரியத்தை ஒன்றை அமைத்து தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகையாளர்களின் குடும்பத்திலும் விளக்கு ஏற்றி வைத்துள்ளார் என்று கேட்கும் பொழுது அனைத்து பத்திரிக்கையாளர்கள் மனதிலும் சந்தோசமான மகிழ்ச்சிகளை தெரிவிக்கிறார்கள்.

 இதே வேளையில் இந்த மாதிரியான முன்னுதாரணமான திட்டத்தை இந்தியா முழுவதும் ஒவ்வொரு முதல்வரும் அந்தந்த மாநிலத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு என ஒரு தனி வாரியத்தை ஏற்படுத்தி அவர்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் .அவர்கள் அச்சம் படாமல் சுதந்திரமாக பத்திரிக்கை எழுதுவதற்கு பாதுகாப்பும் அளிக்கப்பட வேண்டும் அப்போதுதான் உண்மையான ஜனநாயகம் இந்தியாவில் நிலைநாட்டப்படும். இன்றைய தூண்கள் என்று எடுத்துக் கொண்டால் முக்கியமாக கருதப்படுவது பத்திரிக்கை துறைகள் இந்த பத்திரிக்கை துறைகளை இன்னும் மென்மேலும் சிறப்பு பெற தமிழகத்தில் உள்ள அனைத்து குக்கிராமங்களிலும் திராவிட மாடல் மாண்புமிகு மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் நூலகங்கள் ஒன்றை ஏற்படுத்தி தர வேண்டும் அப்போது அந்த குக்கிராமத்தில் உள்ள மாணவர்கள் அந்த நூலகத்தில் தினந்தோறும் படித்து  தமது திறனையும் அறிவாற்றலையும் வளர்த்துக் கொள்வார்கள் அப்போதுதான் சமூகத்தில் அவர்கள் ஒழுக்கமானவர்களாகவும், பொறுப்புள்ளவர்களாகவும்,  தாய் தந்தையர்களுக்கு நல்ல மகனுகளாகவும் இருப்பார்கள். பிற்காலத்தில் தமிழகத்தையும் இந்திய நாட்டையும் வழிநடத்திச் செல்ல இளைஞர்கள் ஒரு தூண்களாக செயல்படுவார்கள் .

 படிப்பு என்பது வேலைக்கு செல்வது மட்டுமல்ல தன்னுடைய அறிவை வளர்த்து தவறு செய்யாமல் இருப்பதற்கும் அந்த அறிவை பிறருக்கு பயன்பட செய்வதற்கும் படிப்பை பயன்படுத்த வேண்டும் அதற்கு அப்புறம் தான் பொருளாதாரத்தை நோக்கி இலக்கினை அடைய முடியும் ஒரு தனி மனிதனை இந்த தேசிய இன பத்திரிகை நாளன்று குறிப்பிடுவது ஒரு தனி நபர் ஒழுக்கம் கல்வி பொருளாதாரம் இவற்றை அடைய தனிநபர் ஒழுக்கம் மட்டும் தான் அவரை முன்னேற்ற பாதைக்கு இழுத்துச் செல்லும் ஒவ்வொருவரும் இதன்படி செயல்பட்டால் தமிழகத்தில் எந்த குற்றங்களும் நடைபெறாது என்பதை இந்த தேசிய பத்திரிகை தின நாள் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை