மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்
வரும் மார்ச் மதம் முதல் வாரத்தில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏப்ரல் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெறும் என எதிர்பார்க்க படுகிறது. இந்நிலையில் அதிமுக - திமுக இரண்டு தரப்பின் வேட்பாளர்களும் களத்தில் ஆயத்தமாக களப்பணியை தொடங்கி வருவதை பார்க்க முடிகிறது.
அந்த வகையில் தற்பொழுது திமுக கைவசம் இருக்கும் வடக்கு தொகுதி திமுக கையைவிட்டு போகும் சூழல் உருவாகி இருக்கிறது. மதுரை வடக்கு தொகுதி பெரும்பாலும் நகர் பகுதியை சேர்ந்த தொகுதி என்பதால், மதுரை மாநகராட்சியின் 200 கோடி மெகா ஊழல் இந்த தொகுதி மக்கள் மத்தியில் திமுகவிற்கு எதிராக கடும் அதிருப்தி நிலவி வருவதை பார்க்க முடிகிறது, மேலும் ஊழல் குற்றசாட்டினால் மதுரை மேயர் பதவி விலகி பல நாட்கள் கடந்தும் இன்னும் மேயர் நியமிக்கப்படவில்லை.
அந்த வகையில் மேயரே இல்லாத மாநகராட்சியாக செயல் இழந்து காணப்படும் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மதுரை வடக்கு தொகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வரும் மக்கள் தேர்தல் தேதியை நோக்கி கோபத்துடன் காத்திருப்பதை பார்க்க முடிகிறது. மேலும் கோ தளபதி அந்த தொகுதியின் ஆளும் கட்சி எம் எல் ஏ வாக இருந்தாலும் கூட கடந்த 5 வருடத்தில் ஆக்கபூர்வமாக எதுவும் செய்யவில்லை என்கிற குமுறல் அந்த தொகுதி மக்கள் மத்தியில் உள்ளது.
இதில் காங்கிரஸ் - திமுக இடையிலான மோதல் குறிப்பாக மதுரை வடக்கு தொகுதியில் உச்சத்தை எட்டி இருக்கிறது, காங்கிரஸ் கட்சிக்கு தொகுதிக்கு 3000 வாக்குகள் கூட இல்லை என தளபதி பேசியது, அதற்கு தளபதி கைவசம் இருக்கும் வடக்கு தொகுதியில் இம்முறை காங்கிரஸ் போட்டியிடும் என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் பேசியது மீண்டும் கோ தளபதி மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிடுவாரா என்கிற குழப்பமும் நீடித்து வருகிறது.
மேலும் கோ தளபதி மீண்டும் வடக்கு தொகுதியில் போட்டியிட்டாலும் கூட சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் காங்கிரஸ் கட்சியினர் கோ தளபதிக்கு எதிராக உள்ளடி வேலை செய்வதற்க்கு தயாராகவே உள்ளனர். இது ஒரு புறம் இருக்க மறுபக்கம் அதிமுக சார்பில் மதுரை வடக்கு தொகுதியில் களம் இறங்க இருக்கும் அதிமுக மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் சரவணன் அவருடைய சூர்யா தொண்டு நிறுவனம் மூலம் எண்ணற்ற மக்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்து வருகிறார்.
அவருடைய தொண்டு நிறுவனம் மூலம் பலருக்கு இலவசமாக செயற்கை கால்களை பொருத்தி வரும் டாக்டர் சரவணன், மேலும் மருத்துவ ரீதியாக அவருடைய தொண்டு நிறுவனம் மூலம் இலவசமாக பல உதவிகளை செய்து வருகிறார் டாக்டர் சரவணன்.
இதில் சூர்யா தொண்டு நிறுவனம் மூலம் பலன் அடைந்த மக்களில் பெரும்பாலானவர்கள் மதுரை வடக்கு தொகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் மக்கள் பிரச்சனையை நேரடியா தலையிட்டு தன்னுடைய சொந்த செலவில் சரி செய்து வரும் டாக்டர் சரவணன் மதுரை வடக்கு தொகுதி மக்களின் செல்ல பிள்ளையாக இருந்து இருந்து வருவதையும் பார்க்க முடிகிறது.
மேலும் மக்கள் மிக எளிதாக அணுக கூடிய வகையில் அதே தொகுதியில் மருத்துவமனையை நடத்திவரும் டாக்டர் சரவணன் தான் வரும் சட்டசபை தேர்தலில் அந்த தொகுதி மக்களின் தேர்வாக இருக்கிறது. அந்த வகையில் அதிமுக பக்கம் இருக்கும் கூட்டணி பலம் , மறுபக்கம், திமுக கூட்டணிக்குள் இருக்கும் உச்சகட்ட உரசல் என வரும் சட்டசபை தேர்தலில் மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் களம் இறங்க இருக்கும் டாக்டர் சரவணணுக்குக்கான வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக இருப்பதை பார்க்க முடிகிறது.