மாண்புமிகு.மக்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் மற்றும் திமுக இளைஞரணி மாநில செயலாளர்.உதயநிதி ஸ்டாலின் . அவர்களுக்கு நன்றி தெரிவித்து கோரிக்கைவைக்கிறார்.சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிசாமி


 
இந்திய சுதந்திர போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் 65 வது குருபூஜை விழாவில்  சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்  திமுக இளைஞரணி செயலாளருமான  
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்து மலரஞ்சலி செலுத்தினார் 

அவருடன் தமிழக அரசின் டெல்லி மேலிட சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், அமைச்சர்கள் கயல்விழி செல்வராஜ், இராஜகண்ணப்பன், பெரியகருப்பன், தங்கம்தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் சாத்தூர் ராமச்சந்திரன், மூர்த்தி,சட்டமன்ற உறுப்பினர்கள் பரமக்குடி முருகேசன், மானாமதுரை தமிழரசி, காதர் பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள், கலந்து கொண்டு  மரியாதை செலுத்தினார்கள்.!

 வருகைபுரிந்த அனைவருக்கும் தேவேந்திர குல வேளாளர்கள் சமுதாயத்தின் சார்பாகவும் என்னுடைய சார்பாகவும் கோடான கோடி        நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
 உதயநிதியின் பரமக்குடி வருகை தேவேந்திர குல வேளாளர்கள் மக்களிடம் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல் இமானுவேல் சேகரன் நினைவேந்தலை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்பது  தேவேந்திர குல வேளாளர்கள் மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பு. 

 அதுபோல ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகர்னார்க்கு ஆண்டு தோறும் செப்டம்பர் 11ஆம் தேதி நினைவு தினத்தன்று 5 லட்சம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் கூடுவதை அனைவரும் அறிந்ததே, 

 திராவிட மாடல் அரசின் மக்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களே  தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையான சுதந்திரப் போராட்ட தியாகிகளின் அரசு விழாவாக அறிவித்து மற்றும் மணிமண்டபம் கட்டித்தர கோரிக்கை வைக்கின்றேன் என்னுடைய நிலைப்பாடும் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர்  இளைஞர்களின் நிலைப்பாடும் ஒன்றுதான். நமது போர்படை தளபதி மாவீரன் சுந்தரலிங்க குடும்பர் படத்தைச் சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்களோடு இடம்பெறச் செய்துள்ளதுள்ளது. இது ஒரு விதத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?