மதுரை தின சங்கு நாளிதழ், மக்களின் உரிமைக்குரல் நாளிதழ் நிறுவனர் ஆசிரியர் டாக்டர் இரா . கண்ணன் அவர்களின் ஸ்ரீஅஞ்சுபனை முனீஸ்வரர் திருக்கோவில் 12 ம் ஆண்டு அபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு
மதுரை ஆகஸ்ட் 29
மதுரை தின சங்கு நாளிதழ், மக்களின் உரிமைக்குரல் நாளிதழ் நிறுவனர் ஆசிரியர் டாக்டர் இரா . கண்ணன் அவர்கள் மேனேஜிங் டிரஸ்டியாக இருந்து வணங்கி வரும் ஸ்ரீ அஞ்சுபனை மகா முனீஸ்வரர், ஸ்ரீ மகா சுடலை கருப்பசாமி திருக்கோவில் 12 ம் வருட அபிஷேக விழா சிவ வாத்தியம், சிவனடியார்கள் சங்கு முழங்க அதிவிமர்சியாக நடைபெற்றது பக்தர்கள் பால்குடம் மற்றும் அக்னி சட்டி எடுத்தும் , நேர்த்தி கடன் செலுத்தினார்கள் வந்திருந்த பெண்சிவனடியார்களுக்கு சேலையில் வைத்து காணிக்கையும் , ஆண் சிவடியார்களுக்கு வேஷ்டி, துண்டில் வைத்து காணிக்கையும் டாக்டர் இரா கண்ணன் தம்பதியினர் வழங்கி ஆசி பெற்றனர் வந்திருந்த பக்த கோடிகள் அனைவருக்கும் உணவு பிரசாதம் வழங்கப்பட்டது அபிஷேக ஏற்பாடுகளை தலைமை பூசாரி ஆறுமுகம் தலைமையில் சிறப்பாக செய்தனர் உடன் ரவீந்திரன்,தின ஜெயம் ஆசிரியர், ஏ.கே. பாஸ்கர், ஆன்மீக நிருபர்கள் ஐயா பொன்ராஜ், சரவணன்,சரவணா கிராபிக்ஸ், சரவணன், அபிநயா பிரிண்டர்ஸ், ராமச்சந்திரன், விக்னாபிரிண்டர்ஸ் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்