பல வருடமாக தூர்வாரப்படாத வடக்குமாங்குடி வடிகால் வாய்க்காலை உடனடியாக தூர்வார வேண்டும் கிராமமக்கள் கோரிக்கை


தஞ்சை ஏப் 25

தஞ்சாவூர்மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி பகுதியின் முக்கிய வடிகால்  வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாத காரணத்தினால் வடக்குமாங்குடி பகுதியில் பல இடங்களில்  வாய்க்காலின் பெரும்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாலும், தேவையற்ற செடி, கொடிகள் ஏராளமாக மண்டியுள்ளது அதனால் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமலும் , மழைக்காலங்களில் வடிகால் ஆக பயன்படுத்த முடியாத நிலை உள்ளது மேலும் மழைகாலங்களில் மழைநீர் குடியிறுப்பு பகுதியில் புகுந்து தெருக்களை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது அதனால் பல்வேறு தொற்று நோய்கள் கிராமங்களில்   பரவ காரணமாக அமைகிறது  மேலும்  வடக்குமாங்குடி கடைவீதிபகுதியில் வடிகால் வாய்க்காலின் பெரும்பகுதியை சிலர்  ஆக்கிரமித்து கடைகள் அமைத்துள்ளனர் அதனால் மழை காலங்களில் மழைநீர்  செல்வது தடைபடுகிறது வடிகால் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்பகளை அகற்றி தூர்வாரிட வேண்டி   கிராமமக்கள்,   பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்துறையினரிடம்  பல வருடமாக வலியுறுத்தி வருகின்றனர் ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்பே வடிகால் வாய்க்காலில் உள்ள  ஆக்கிரமிப்புகளை  அகற்றி  வாய்க்கால்களை  முழுமையாக  தூர்வாரிட அரசு  நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி  கிராம மக்கள்  அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.