ஏப்ரல் 14 வியாழக்கிழமை இன்றைய ராசிபலன்



🔯 மேஷம் -ராசி: 🐐_*
பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் ஏற்படும். உடனிருப்பவர்களின் தன்மைகளை அறிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வதற்கான சூழ்நிலைகள் அமையும். வித்தியாசமான கற்பனைகளின் மூலம் தூக்கமின்மை ஏற்படும். அமைதியான நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️அஸ்வினி : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️பரணி : முன்னேற்றம் உண்டாகும்.
⭐️கிருத்திகை : தூக்கமின்மை ஏற்படும்.
*════════════════*

*_🔯 ரிஷபம் -ராசி:  🐂_*
பேச்சுத்திறமைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். சாதுர்யமான செயல்பாடுகளின் மூலம் எண்ணிய செயல்களை செய்து முடிப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கல்வி கற்பதில் மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். சோர்வு அகலும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்‌.

⭐️கிருத்திகை : லாபகரமான நாள்.
⭐️ரோகிணி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️மிருகசீரிஷம் : முன்னேற்றம் உண்டாகும்.
*════════════════*

*_🔯 மிதுனம் -ராசி: 👫_*
உடனிருப்பவர்கள் பற்றிய பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். சொத்து பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விளையாட்டு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. அரசு தொடர்பான உதவி மற்றும் அதை சார்ந்த தடையை அறிந்து கொள்வீர்கள். வரவு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.

⭐️மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
⭐️திருவாதிரை : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐️புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
*════════════════*

*_🔯 கடகம் -ராசி: 🦀_*
தனவரவு தேவைக்கு ஏற்ப இருக்கும். உயர் அதிகாரிகளிடம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் சாதமான சூழல் ஏற்படும். தாமதம் அகலும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️புனர்பூசம் : ஆதரவு கிடைக்கும்.
⭐️பூசம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️ஆயில்யம் : அனுபவம் கிடைக்கும்.
*════════════════*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁_*
குடும்பத்தில் பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அரசு சார்ந்த உதவி கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் தொழில் சார்ந்த விஷயங்களில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எந்தவொரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அறிமுகம் கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் :  5
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்.

⭐️மகம் : உதவி கிடைக்கும்.
⭐️பூரம் : முன்னேற்றமான நாள்.
⭐️உத்திரம் : விருப்பங்கள் நிறைவேறும்.
*════════════════*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️_*
ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். புதுவிதமான அனுபவத்தின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். தடைகள் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️உத்திரம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️அஸ்தம் : தேவைகள் நிறைவேறும்.
⭐️சித்திரை : சேமிப்பு குறையும்.
*════════════════*

*_🔯 துலாம் -ராசி: ⚖_*
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வழக்கு சார்ந்த பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். நினைத்த காரியங்களை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். கவலைகள் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️சித்திரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
⭐️சுவாதி : மாற்றம் ஏற்படும்.
⭐️விசாகம் : சாதகமான நாள்.
*════════════════*

*_🔯 விருச்சிகம் -ராசி: 🦂_*
உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். தொழில் சார்ந்த ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்பான பயணங்களில் முன்னேற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️விசாகம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
⭐️அனுஷம் : அறிமுகம் கிடைக்கும்.
⭐️கேட்டை : முன்னேற்றம் உண்டாகும்.
*════════════════*

*_🔯 தனுசு -ராசி: 🏹_*
எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். சமூக பணிகளில் ஆதரவான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். வாழ்க்கை துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️மூலம் : அனுகூலமான நாள்.
⭐️பூராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
⭐️உத்திராடம் : பயணங்கள் சாதகமாகும்.
*════════════════*

*_🔯 மகரம் -ராசி: 🐴_*
செய்யும் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். வாழ்க்கை துணைவர் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிக்கல் அகலும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.

⭐️உத்திராடம் : பாராட்டுகள் கிடைக்கும்.
⭐️திருவோணம் : சாதகமான நாள்.
⭐️அவிட்டம் : சிந்தனைகள் மேம்படும்.
*════════════════*

*_🔯 கும்பம் -ராசி: ⚱_*
செலவுகளை குறைப்பதன் மூலம் பிரச்சனைகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்து செயல்படுவது நல்லது. எந்தவொரு செயலிலும் திருப்தியின்மை உண்டாகும். எதிர்ப்புகள் அகலும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு.

⭐️அவிட்டம் : சோர்வான நாள்.
⭐️சதயம் : சிந்தித்து செயல்படவும்.
⭐️பூரட்டாதி : திருப்தியின்மை உண்டாகும்.
*════════════════*

*_🔯 மீனம் -ராசி: 🐠_*
தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவு கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் விரயங்கள் ஏற்பட்டாலும் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். மறதி மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்.

⭐️பூரட்டாதி : ஆதரவான நாள்.
⭐️உத்திரட்டாதி : விரயங்கள் உண்டாகும்.
⭐️ரேவதி : மாற்றமான நாள்.
*┈┉┅━•• 🔔🔔 ••━┅┉┈*

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை