சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?
மதுரை மதுரா கல்லூரியை ஒட்டிய சர்வீஸ் ரோட்டில் (மேயர் முத்து பாலம் கீழ்புரம்) பல ஆண்டுகளாக பழைய எடைக்குபோடும் கார்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளார்கள்
கார்களுக்கு நடுவே ரோட்டில் நடந்து செல்வோர் சிறுநீர்கழித்தும் , கோழி கழிவுகளையும் குப்பைகளை கொட்டியும் அந்த சர்வீஸ் ரோட்டையே நாசபடுத்தி வருகின்றனர்
இந்த பாலம் கீழ்புரமாகதான் ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்து வாகனங்கள் பெரியார் நிலையத்தித்திற்கும் திருப்பரங்குன்றத்தில் இருந்து வரும் வாகனங்கள் சர்வீஸ்ரோடு வழியாக சுப்பிரமணியபுரம், ஜெய்ஹிந்த்புரத்தித்திற்கும் செல்ல வேண்டும்
மதுரா கல்லூரி, தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் படிக்கும் நூற்றுக்கனக்கான மாணவ, மாணவிகள் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் போன்ற கிராமபுர பகுதிகளில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் வந்து இந்த வழியாகத்தான் நடந்து வர வேண்டும்
இச்செய்தியை எங்களது நமது தின ஜெயம் நாளிதழ் வெப் சேனல் மூலம் மாணவ, மாணவிகளிடம் நேர்காணல் எடுத்து அதை சிறப்பு செய்தியாக வெளியிட்டு இருந்தோம்
வீடியோ வெளியிட்டு ஒரு வாரம் ஆகியும் போக்குவரத்து காவல்துறை சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காதது வருத்தம் அளிக்கிறது
தமிழ்நாடு முழுவதும் வாழ்போஸ்டர் செய்தியாக வெளியிடுவதற்குள்
விரைந்து நடவடிக்கை எடுப்பார்களா
போக்குவரத்து மதுரை மாநகர் காவல்துறையினர்