மதுரை மாநகர் போக்குவரத்து காவல்துறையின் சார்பில்" சாலை பாதுகாப்பு" விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது
மதுரை போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையர் செல்வின் கூறியிருப்பதாவது: சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.போக்கு வரத்திற்கு இடையூராக நிறுத்தப்படும் வாகனங்களை ஒழுங்குபடுத்த எடுக்கபடும் நடவடிக்கையாக மதுரை நகர் முழுவதும் "ஒரு நாளுக்கு ஒரு ஏரியாவாக ஒன் சைடு பார்க்கிங் முறை " ஏற்படுத்தபட உள்ளது என அவர் தெரிவித்தார்.மேலும் பெரியார் பேரூந்து நிலைய சாலையில் சென்ற வாகன ஒட்டிகளிடம் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கி விபத்து குறித்த அபாயங்களை விளக்கி கூறினார் உடன் ஆய்வாளர் மார்ட்டின், சார்பு ஆய்வாளர்கள் முரளி, அதியமான், நவநீதகிருஷ்ணன், கருப்பையா மற்றும் பலர் உடனிருந்தனர்