ராமநாதபுரம் அருகே ஸ்ரீ வாலேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆடி பொங்கல் விழா மற்றும் சுமங்கலி பெண்கள் திருவிளக்கு பூஜை நடைபெற்றது

இராமநாதபுரம் ஆகஸ்ட்  - 12

ராமநாதபுரம் அருகே உள்ளது பெரிய அக்கிரமேசி கிராமம் இப்பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வாலேஸ்வரி அம்மன் திருக்கோயில் ஆலயத்தில் அம்மனுக்கு ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி முன்னிட்டு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது

 அதனை தொடர்ந்து ஆடிப் பொங்கல் , கூழ் காய்ச்சி ஊற்றும் நிகழ்வும் ஆகியவை நடைபெற்றது இதனை தொடர்ந்து  சுமங்கலி பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது , கல்வி, செல்வம், வேலைவாய்ப்புகள் கிடைக்கவும் மற்றும் விவசாயம் செழிக்கவும் கூட்டு வழிபாடு நடத்தினர்

ஸ்ரீவாலேஸ்வரி அம்மன் ஆலய வளாகப் பகுதியில் அமைந்துள்ள விநாயகப் பெருமான் ஸ்ரீ சோனையா சாமி, கருப்பணசாமி, இருளப்பசாமி, ராக்கச்சி அம்மன், வீரமாகாளி, இருளாயி அம்மன் ஆகிய பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்,  வார வழிபாட்டு குழு நிர்வாகி கோமதி திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தார்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை