ஜெய்ஹிந்த்புரம் அருள்மிகு வீரமாகாளியம்மன் ஆடி வெள்ளியை முன்னிட்டு வீதி உலா பரவசத்தில் பக்தர்கள்
மதுரை ஆகஸ்ட் - 12
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளியம்மன் திருக்கோவிலில ஆடி கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் வீதி உலா பூசாரி பாண்டி தலைமையில் நடைபெற்றது ஒயிலாட்டத்துடன் இரவு 8 மணிக்கு கோவிலில் இருந்து துவங்கி வீரமாகாளியம்மன் கோவில் தெரு, நேருதெரு, நேதாஜிதெரு, அண்ணா முக்கிய வீதி, பெரியார் குறுக்கு தெரு, ஆகிய தெருக்களில் சென்று இரவு 2 மணிக்கு கோவிலுக்கு திரும்பியது பெண்கள் குடும்பத்துடன் திருக்கண் வைத்து வழிபாடு செய்தனர் பெண் குழந்தைகளின் ஒயிலாட்டத்தை வளர்மதி என்பவர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்