குண்டாறு டேம் கூட்டி செல்லும் ஜீப் டிரைவர்கள் அடாவடித்தனம் நடவடிக்கை எடுப்பாரா தென்காசி கலெக்டர்?
தென்காசி ஆகஸ்ட் - 8
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ளது குண்டாறு டேம்
இங்கே குளிப்பதற்கு தனியார் அருவிகள் பல உள்ளன குளிக்க செல்லும் பயணிகளை அழைத்துச் செல்ல மகேந்திரா ஜீப்கள் தனியாரால் இயக்க படுகின்றன ஒரு குடும்பத்திற்கு போக வர ஆயிரத்து ஐநூறு .முதல் மூவாயிரம் வரை முடிந்த வரை பணத்தை பிடுங்கி கொள்கிறார்கள் ஜீப்பில் பயணம் செய்வதற்கு எந்த வித பாதுகாப்பும் இல்லை ஏற்கனவே குண்டும் குழியுமாக மிக மோசமாக உள்ள ரோட்டில் (காட்டில்) மேற்கண்ட ஜீப் ஒட்டும் பையனிடம் தம்பி மெதுவாக செல் என்று சொன்னால் சும்மா வாரீங்களா இல்ல நடுகாட்டில் இறக்கி விடவா என்று திமிராக பேசுகிறார் ஆண் பயணிகளாவது பரவாயில்லை பெண்கள் நிலை படு மோசம் பயணிகளின் நிலையை கருத்தில் கொண்டு மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்