சென்னை to திருச்சி நாற்கரசாலை பெரம்பலூரில் அரசு பேருந்து நிறுத்தும் ஹோட்டல் என்ற பெயரில் பயணிகளிடம் வழிப்பறி
திண்டிவனம் ஜூன் - 2
சென்னையில் இருந்து மதுரை, திருச்சி ரோடு பெரம்பலூரில் உள்ளது ஸ்ரீ நிவசாசா ஹோட்டல் இங்கு தான் சென்னையில் இருந்து வரும் அரசு பேருந்துகள் அனைத்தும் உணவருந்த வேண்டும் என்பது போக்குவரத்து துறை அதிகாரிகளின் உத்தரவுவாம்
நமது தின ஜெயம்ஆசிரியரான நானும் நமது நிருபரும் அலுவலக விசயமாக சென்னை சென்று விட்டு அரசு பேருந்தில் இன்று காலை பயணித்தோம் அந்த உணவகத்தில் இரண்டு டீ போடுங்க என்று சொல்லிவிட்டு ஒரு உளுந்த வடையை எடுத்து சாப்பிட வாயில் வைத்தால் அரை வடையிலேயே தொண்டை அடைத்து விட்டது .
சரி டீ எப்படி இருக்கு என்று பார்க்கலாம் என்றால் அது பவுடரில் போட்ட டீ என்னாப்பா பால் சட்டியெல்லாம் வச்சிருக்கிற அப்புறம் பவுடர் டீ தருகிறாய் என்று கேட்டால் இது தான் டீ எடுத்து குடிங்க என மிரட்டும் தோனியில் பதில் சொல்கிறார் விட்டால் சட்டை பையில் பணத்தை எடுத்து விடுவார் போல ?
இவருகெல்லாம் யார் இந்த தைரியம் கொடுத்தது.
இது பற்றி ஒட்டுனர், நடத்துனர் கூறும்போது நாங்கள் என்ன செய்வது இந்த ஹோட்டலில் தான் நிறுத்தி சீல் வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்
உடனே போக்குவரத்து துறை அமைச்சர் அவர்கள் தலையிட்டு மேற்கண்ட ஹோட்டலின் உரிமத்தை ரத்து செய்ய் வேண்டும் என பயணிகளோடு சேர்ந்து நாமும் கோரிக்கை வைக்கிறோம்