மதுரை முடக்குச் சாலை ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் 80ம் ஆண்டு உற்சவ விழா
மதுரை ஜுலை - 15
மதுரை முடக்குச் சாலையில் நாடி வரும் பக்தர்களை காத்து அருள் பாலித்து கொண்டிருக்கும் கேட்ட வரம் தரும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் 80ம் ஆண்டு உற்சவ விழா ஜூலை 13ம் தேதி வியாழக்கிழமை விளக்கு பூஜையுடன் துவங்கியது
15ம் தேதி சனிக்கிழமை இன்று அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்களாக மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆனையர், காவல் துறை ஆய்வாளர், சட்டம் & ஒழங்கு, குற்ற பிரிவு ஆய்வாளர் (எஸ்.எஸ் காலனி) காவல்துறை ஆய்வாளர் சட்டம் & ஒழுங்கு, குற்ற பிரிவு ஆய்வாளர் (கரிமேடு) ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை தலைவர் சுப்பிரமணி பொருளாளர் சேகர் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்து இருந்தனர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்