கந்தரவக்கோட்டை ஒன்றியத்தில் மேல்நிலை வகுப்பு ஆசிரியர்களுக்கு குறுமவள மைய அளவில் பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி.
கந்தர்வகோட்டை சூன் 24.
கந்தர்வக்கோட்டை ஒன்றியத்தில் ஆசிரியர்களுக்கு குறுவளமைய பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின் படி கந்தர்வகோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் குறுவளமைய பயிற்சி கந்தர்வக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் அவர்கள் பார்வையிட்டு உடல்நலம், மனநலம் மற்றும் வாழ்வியல் திறன்கள் சார்ந்து கருத்துக்களை ஆசிரியர்களுக்கு எடுத்துக் கூறி அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் கொண்டு சேர்க்க கேட்டுக் கொண்டார். முன்னதாக பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ஆனந்தராஜு பெண்கள் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு சசிக்குமார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் குமாரவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இப்பயிற்சியில் ஆசிரியர்கள் கணேசன், முருகாயி, ராஜலெட்சுமி, ராஜா ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டு உடல்நலம் , நல்வாழ்வு, மனநலம், வளரிளம் பருவத்தினருக்கான வாழ்வியல் திறன்கள் போன்றவற்றில் விரிவாக பயிற்சி அளித்தனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.