உலக ரெட் கிராஸ் நாள் விழா மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் மாநகராட்சி ஆனையாளர் பங்கேற்பு

 மதுரை மே-8

ரெட்கிராஸ் சொசைட்டி நிறுவனர் திரு. ஜீன் ஹென்றி டூணான்ட் அவர்களது  பிறந்த நாளான மே -8 அன்று 
உலக ரெட்கிராஸ் நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது 

நிறுவனர்
திரு. ஜீன் ஹென்றி டூணான்ட் அவர்களது பிறந்தநாளை  கொண்டாடும் விதமாக 
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கட்கிழமை 
ரெட்கிராஸ் அமைப்பின்  மதுரை தலைவரான மாவட்ட ஆட்சியர்
மரு. அனீஷ்சேகர்இ.ஆ.ப., அவர்களது தலைமையில்  
நிறுவனர் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது 
ஆட்சியர் அலுவலக வாயிலில் மரக்கன்று நடப்பட்டது 
நம்மதுரை பசுமை மதுரைஎன்பதன் அடிப்படையில்  
பொதுமக்களுக்கு 500 பயன்தரும் மற்றும் பழவகை 
மரக்கன்றுகள் வழங்கப்பட்டது 
மேலும் 
மதுரை அரசு இராசாசி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகின்றவர்களுக்காக 
குருதிக்கொடை முகாம் நடைபெற்றது 

மதுரை மாவட்ட ஆட்சியர் மரு.  அனீஷ் சேகர்  இ.ஆ.ப அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகளில் மதுரை  மாநகராட்சி ஆணையாளர் திரு. சிம்ரன் ஜித்சிங் காலோன் இ.ஆ.ப., 
மதுரை மாவட்ட கூடுதல் ஆட்சியர் திரு சரவணன் இ.ஆ.ப.,
பயிற்சி  ஆட்சியர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் 

இந்நிகழ்வில் 
ரெட்கிராஸ் உறுப்பினர்கள் மற்றும்
யூத்ரெட்கிராஸ் 
ஜூனியர் ரெட்கிராஸ்  மாணவ மாணவியர்கள் பெருமளவில்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்  

செயலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்
 

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை