சீர்காழி சட்டைநாதர் திருக்கோவிலில் கிழக்கு கோபுரத்தை புனரமைத்து கொடுத்தார் சமூக ஆர்வலர் மார்கோனி இமயவரம்பன் பக்தர்கள் மகிழ்ச்சி
மே 15
சீர்காழி மார்கோனி இமயவரம்பன் கூறியிருப்பதாவது:
இன்றைய நாளில் இருந்து - 32 ஆண்டுகளுக்கு முன்பு
பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்.
சீர்காழி சட்டைநாதர் சுவாமி திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இலட்சக்கணக்கான பக்தர்களில் ஒருவனாக கும்பாபிஷேகத்தை பார்த்து கோபுரத்தை தரிசித்தேன்.
24 ஆம் தேதி நடக்கவிருக்கும் மகா கும்பாபிஷேகத்திற்கு
மக்களிடம் காணிக்கை வாங்காமல்
இந்த ஆண்டு நடைபெற்ற திருப்பணியில் என்னை இணைத்துக் கொண்டு இன்று கிழக்கு ராஜகோபுரத்தை புனரமைத்து முடித்து , இன்று தங்க முலாம் பூசப்பட்ட கோபுர கலசம் வைத்து இறை தொண்டாற்றி இருக்கிறேன்.
பக்தர்கள் பலரும் பல நல்ல காரியங்களை செய்து வந்திருக்கிறார்கள்.
முதுகலை பொறியியல் படிப்பிற்கு பிறகு தொடர்ந்து வியாபாரம் செய்து வந்த எனக்கு, இறைப்பணியோடு மக்கள் பணியையும் செய்வதற்கு மனவளிமையை கொடுத்த சீர்காழியில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ சட்டைநாத சுவாமியை மனம் மெய் உடலால் வணங்கி,
கிழக்கு இராஜகோபுரத்தை திருப்பணி செய்து புதுப்பிக்கும் பாக்கியத்தை வழங்கிய
சீர்காழி ஊர் கட்டமைப்பில், கோவில் திருப்பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட முன்னோர்களை, இந்த நாளில் நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன்.
என்றும் மக்கள் பணி செய்ய மன வலிமைபெற பிரார்த்திக்கிறேன்.
மார்கோனி இமயவரம்பன்.
15.05.2023.