கள்ளழகர் எதிர்சேவை நேரடி ஒளிபரப்பில் நமது தின ஜெயம் நாளிதழ்
மே 4
அழகர் மலையில் இருந்து ஸ்ரீகள்ளழகர் கள்ளர் திருக்கோலத்தில் கண்டாங்கி சேலை கட்டி அதிர்வேட்டுமுழங்கமதுரைக்கு பல்லாக்கில் புறப்பட்டார் இன்று இரவு தல்லாகுளத்தில் எதிர் சேவை நடைபெறும். மதுரைக்கு வரும் அழகரை பக்தர்கள் சர்க்கரை கிண்ணத்தில் தீபம் ஏற்றி எதிர்கொண்டு அழைப்பார்கள்.நாளை 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். லட்சக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 6ஆம் தேதி வண்டியூர் தேனுர் மண்டபத்தில் சேஷ வாகனத்தில் அருள்பாலிக்கிறார். கருட வாகனத்தில் எழுந்தருளும் அழகர் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் தருகிறார்.
அன்றைய தினம் இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார கோலத்தில் காட்சி தருகிறார். 8 ஆம் தேதி மோகனாவதாரத்திலும் 10ம் தேதி இரவு கள்ளழகர் திருக்கோலத்தில் புஷ்ப பல்லாக்கில் " அழகர் கோவிலுக்கு திரும்புகிறார்.