மதுரை பழங்காநத்தம் 74 வது வார்டு பாலகிருஷ்ணமுதலியார் தெருவில் வெள்ளம் போல் சாக்கடை பொதுமக்கள் அவதி ?உடனடியாகசரி செய்யுமா மதுரை ஸ்மார்ட் ? மாநகராட்சி ?
மதுரை மே-8
மதுரை பழங்காநத்தம் 74 வது வார்டு நீலகண்டன் கோவில் மெயின் ரோடு பாலகிருஷ்ண முதலியார் குறுக்கு தெருவில் சாக்கடை கழிவு நீர் வெள்ளம் போல் ஒடுகிறது இந்த தெருவில் தான் ஏரியாவுக்கான ரேசன் கடை உள்ளது இங்கு வந்து செல்லும் பொதுமக்களும் , பெரியவர்களும், மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் இது சம்பந்தமாக நமது தின ஜெயம் நாளிதழில் செய்தி வெளியீட்டு அப்போது சரி செய்யப்பட்டது நிரந்தர தீர்வாக இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்