32 ஆண்டுகளுக்குப் பின் நாளை நடைபெரும் சீர்காழி சட்டைநாத சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கு மலர் தூவுவதற்காக 9 லட்சம் செலவில் ஹெலிபேட் அமைக்கப்பட்டது - மார்கோனி இமயவரம்பன்


சீர்காழி மே - 23
புஷ்ப விமானமும் ஹெலிபேடும்.

தியாகராஜர் திருக்கோவில் திருவாரூரில் அமைந்ததைப் பற்றி ஒரு கதை இருக்கிறது.
புஷ்பக விமானத்தில் இந்திரன் வந்து தியாகராஜரை அழைத்துப் போகும்போது, "நான் இல்லை தியாகராஜா" என்று குதித்து விட்டதாகவும் அப்படி ஏழு இடத்தில் குதித்த சிவலிங்கங்கள் மரகத லிங்கங்களாக ஏழு ஸ்தலங்கள் இருப்பது நாம் அறிவோம்.

புராண காலத்தில் சொல்லப்பட்ட கதைகளில் வரும் புஷ்பக விமானங்களைப் போல சீர்காழியில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விமானம் மூலம் மலர் தூவும் ஏற்பாட்டினைச் செய்ய மகா சன்னிதானம் அவர்கள் ஓராண்டுக்கு முன்  உத்தரவு தந்தார்கள்.

ஓர் ஆண்டாக தொடர்ந்து வேலை செய்து ஹெலிபேட் கட்டி முடித்து கடந்த மூன்று மாதங்களாக அரசாங்க உத்தரவுக்குத் தினந்தோறும் நடையாக நடந்தும் எதுவும் நடக்காத காலத்தில் நேற்றைய தினம் சட்டநாதர் சுவாமிக்கு தனி சன்னதி அமைத்து மருந்து சாத்தும் இரவுவேளையில் உத்தரவு கையில் கிடைத்தது, இறையருளே.

கிட்டத்தட்ட ஹெலிகாப்டர் வாடகை மட்டும் ஒன்பது லட்சம் ரூபாய் செலவில் இந்தத் மலர் தூவும் கைங்கரியத்தை செய்திருக்கிறேன். ஹெலிபேட் அமைப்பதற்கான அத்தனை வேலைகளும் தனியாகச் செய்து முடித்திருக்கிறேன், சுமார் 5 லட்சம் செலவில். இறையருள் மக்களை காக்கட்டும்.

நேற்றைய மதியம் தமிழ்நாடு முழுவதும் வெயில் கொளுத்திய நேரத்தில் திருநிலை நாயகி அம்பாள் பிரம்மபுரீஸ்வரர் சன்னதிகளில் குருமகா சன்னிதானம் அவர்களின் திருக்கரங்களால்
மருந்து சாத்தும்(அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் என்பது சுவாமி சிலைகளுக்கு கீழே மருந்து சாத்துவது) நேரத்தில் 15 நிமிடம் சீர்காழி முழுவதும் மழை கொட்டி தீர்த்தது இறையருளே. இயற்கை மக்களை வளம் பெற செய்யட்டும்.

நாளை 32 ஆண்டுகளுக்குப் பின் நடக்க இருக்கும்
 சீர்காழி   சட்டைநாத சுவாமி தேவஸ்தானம் திருக்கோவிலில்  மகா கும்பாபிஷேகம்  மக்கள் வாழ்வில் எல்லா நலன்களையும் கிடைக்கச் செய்யும் நாளாக இருக்கும் என்பதை இறையருள் இயற்கை வழி உணர்த்தியதாக அறிகிறேன்.

மகா கும்பாபிஷேகத் திருப்பணிகளில் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவும் பாக்கியத்தைத் எனக்கு தந்த குரு மகா சன்னிதானம் அவர்களின் பொற்பாதம் தொட்டு வணங்கி மகிழ்கிறேன்.

மார்கோனி இமையவரம்பன்.
23.05.2023.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை