ஈகைப் பெருநாள் என்னும் ஈதுல் ஃபித்ரைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயங்கனிந்த நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்


மதுரை ஏப்-22

ஈகைப் பெருநாள் என்னும் ஈதுல் ஃபித்ரைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயங்கனிந்த நல் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்

புனிதமிகு ரமலான் மாதம் முழுவதும் நோன்பிருந்து, அதிகாலை முதல் மாலை வரை ஒரு சொட்டு நீரும் பருகாமல், உண்ணாமல், உணர்வுகளைக் கட்டுப்படுத்திப் பெற்றுள்ள மார்க்கப் பயிற்சியை ஆண்டு முழுவதும் மனதிற்கொண்டு அறநெறிப்படி வாழ வேண்டும் என்பதே இறைவனுக்கு விருப்பமான வாழ்வாகும் அதன் படி வாழ்ந்து.

இஸ்லாமிய இறை வணக்கம் என்பது தொழுகை, நோன்பு இவற்றோடு மட்டும் நின்று விடமால். பிற மனிதர்களின் நலன் காக்கவும், அவர்களின் சிரமங்களைப் போக்கவும் பாடுபடுவதும் இஸ்லாத்தின் பார்வையில் இறைவணக்கமாகவே உள்ளது அவ்வாறு வாழ்ந்தும்.

பொருளாதார நெருக்கடி, பெரும் நோய் தொற்று, இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அரசியல் காரணங்களால் அடக்குமுறைக்கும், போர் சூழலுக்கும் உள்ளாகும் உலகம் என நாலாபுறமும் நிலைகுலைந்து போயுள்ள சூழலில், இஸ்லாம் வலியுறுத்தும் ஈகையென்னும் அருட்குணம் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த மனிதக் குலத்திற்கும் உதவியிருப்பதை நாம் மறக்க இயலாது.

ஏழை, எளியவர்களும், அறிவிக்கப்படாத அடக்குமுறைகளால் வீடு, வாசல், உணவுகளை இழந்து தவிக்கும் எண்ணற்றோருக்கு, சமூகத்தின் அடித்தட்டு நிலையில் உள்ள அனைத்துப் பிரிவினருக்கும் கடுமையான வாழ்வியல் நெருக்கடியைச் சந்தித்துள்ள சூழலில், இஸ்லாம் வலியுறுத்தும் ஈகை என்ற அருட்குணம் இதற்கெல்லாம் ஒரு அருமருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை அப்படி பட்ட குணம் கொண்டும்.

ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் அனைவரும் வாழ்வில் ஈகையை முன்னிலும் அதிகமாகக் கடைப்பிடித்து, இன்னலுற்ற மக்களின் மீட்சிக்குப் பணியாற்றிய.. முஸ்லிம்கள் முஸ்லிமல்லாத பிற தொப்புள்கொடி உறவுகளின் நலன் பேணுவதிலும் முன்னின்று பணியாற்றிய மனித நேயமிக்க சமூகத்தின்  ஈகைப் பெருநாள் வாழ்த்துக்கள்.

பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படும் ஈகைத் திருநாளில் அனைத்து இஸ்லாமிய மக்களின் வாழ்விலும் வசந்தம் ஏற்பட இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

என் உறவுகள் அனைவருக்கும் அகங்கனிந்த ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்...
 
இப்படிக்கு
ஏ.கே பாஸ்கர்
ஆசிரியர்
நமது தின ஜெயம் நாளிதழ்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை