கொடைக்கானல் மலை கிராமம் பூம்பாறை குழந்தை வேலப்பர் கோவில் திருத்ரோட்டம் நமது தின ஜெயம் நாளிதழ் சிறப்பு மலர் வெளியீடு
திண்டுக்கல் பிப்-16
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைப் பகுதியில் உள்ளது பூம்பாறை மலைக் கிராமம். இங்கு பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. பழநிக்கு அடுத்தபடியாக இக்கோயிலில் நவபாஷாணத்தால் ஆன முருகன் சிலை உள்ளது. இக்கோயில் தேரோட்ட திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
பூம்பாறை முருகன் கோயில்
கொடைக்கானலிருந்து 18 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பூம்பாறை கிராமம். இந்த முருகன் நினைத்தால் தான் நாம் இங்கு வர முடியும்”
இந்த தேதியில், இந்த நேரத்தில் வரவேண்டும் என்பது அவன் விருப்பம் . மிகவும் சக்திவாய்ந்த நவபாசான முருகன்.
இந்தியாவில் உள்ள எல்லா கோவில்களிலும் ஐம்பொன் வெங்கலம் கற்களால் ஆன சிலைகள்தான் உள்ளன. ஆனால் இந்தியாவில் உள்ள இரண்டு கோவில்களில் மட்டுமே நவ பாஷானத்தால் உருவாக்கப்பட்ட அபூர்வமான சிலைகள் உள்ளன, அவை
1,பழனி மலை மீதுள்ள தண்டாயுதபாணி முருகன் சிலை,
2. பூம்பாறை மலையில் உள்ள குழந்தை வேலப்பர் முருகன் சிலை.
உலகிலேய நவபாஷான சிலையை உருவாக்கி பிரதிஷ்டை செய்தவர் மாமுனிசித்தர் போகர் என்ற மாமுனிவராகும். இவர் உருவாக்கிய பழனி மலை முருகன் மட்டும் தான் என்று எல்லோரும் அறிவர்
ஆனாலும் பூம்பாறை முருகன் சிலையும் அவர்தான் நவபாஷானத்தால் உ ருவாக்கியவர் என்பது அறியாத தெரியாத செய்தியும் கூட….அதுபோல் அருள் பாலிப்பதிலும் பழனி முருகன் போன்று அருள் தர வல்லவர் என்பது அந்த கோவிலு்க்கு சென்று அனுபவ ரீதியாக பயன் அடைந்தவர்களுக்குத்தான் தெரியும்
மதுரையில் இருந்து ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர், சரவணன்,
பழனியில் இருந்து மாவட்ட நிருபர் கார்த்திகேயன் ,மாவட்ட புகைப்பட நிருபர் கவுன்சிலர் கண்ணன், தாலுகா நிருபர்கள் பாண்டியராஜன் , அய்யர் ராஜா, சந்துரு, ஆகியோர் கலந்து கொண்டனர்
இத்திருக்கோயிலின் தல வரலாற்றை நமது தின ஜெயம் நாளிதழில் பதிவு செய்தது வேறு எந்த பத்திரிகையும் செய்யாத ஒன்று.
பத்திரிகையை வாங்கிய அதிகாரிகளும், பக்தர்களும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துக் கொண்டனர் இதுவும் நமது தின ஜெயத்திற்கு கிடைத்த மற்றொறு சிறப்பு.