உயர்கல்வி பெற அரசு அனைத்து உதவிகளும் வழங்கும் என அறிவித்த மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி நன்றி
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திராவிட மாடலின் மக்கள் முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் எட்டா கனவு உயர்கல்விகளான தொழில்நுட்பக் கல்வி, இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம மற்றும் அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் போன்ற புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு முழு செலவினையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளும் என்று திராவிட மாடலின் மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள் என்ற செய்தி பொதுமக்களின் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களிடம் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆணை தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயர்கல்வி போன்ற நிறுவனங்களில் நினைத்துப் பார்க்க முடியாத ஐஐடி, ஐஐஎம் மற்றும் மருத்துவம் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு எட்டாக்கனியாய் இருந்ததே,
எட்ட வைத்துள்ளீர்கள். தங்கள் திராவிட ஆட்சியில் இது சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளது.முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர்.கலைஞர் கருணாநிதி அவர்களின் ஆட்சியில் இடஒதுக்கீடு கொள்கையை நடைமுறைப்படுத்தி, 50 விழுக்காட்டில் 30 விழுக்காடு பிற்படுத்தப் பட்டோருக்கும், 20 விழுக்காடு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கும், 18 விழுக்காடு பட்டியல் இன பிரிவினருக்கும், 3 விழுக்காடு அருந்ததியருக்கும், 3.5 விழுக்காடு இஸ்லாமியருக்கும், 1 விழுக்காடு மலைவாழ் மக்களுக்கும் அளித்து அனைத்து சமூகத்திலும் அடித்தட்டு மக்கள் கல்வி, வேலை வாய்ப்புகளை உறுதி செய்ததனால் மானுட மேம்பாட்டுக் குறியீட்டில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்திட்டம் இல்லை . அதற்கேற்ப முதன் முதலில் திராவிட மாடலின் மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தங்கள் ஆட்சியில் ஏற்படுத்தி உள்ளீர்கள். இதற்கு தமிழகம் மக்கள் தங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளனர். தமிழக பொது மக்களின் சார்பாகவும், என் சார்பாகவும் திராவிட மாடலின் மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகிய உங்களுக்கு நன்றிகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது வருங்காலத்தில் இந்தியாவிற்கு முன்னுதாரணமாக விளங்கும் திட்டமாகும்.அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் இடையே சமத்துவத்தை, ஏற்படுத்தும். இதனை அரசு பள்ளி மாணவர்கள் கிராமப்புறங்களில் அந்தந்த ஊரில் உள்ள படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர்கள் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களை அழைத்து,ஒரு கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்து அக்கூட்டத்தில் மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள ஐ.ஐ.டி ,ஐ.ஐ.எம், மற்றும் மருத்துவம் போன்ற கல்வி நிறுவனங்களில் இலவசமாக படிப்பதற்கு அரசு அனைத்து செலவுகளையும் அரசை ஏற்றுக் கொள்கிறது என்ற செய்திகளை மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வவை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் இதனை நன்கு அறிந்து உயர் கல்வி படிப்பதற்கு தங்களை தயார்படுத்திக்கொள்வார்கள்.வரும் காலங்களில் தமிழக மாணவர்கள் தேசிய அளவில் சாதனை புரிந்து தமிழகத்திற்கும் தமிழக மக்கள் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் பெருமை சேர்ப்பார்கள் என்பதில் ஐயமில்லை என்பதை முன்மொழிகிறேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.