மதுரையில் நடந்த திருமண விழாவில் பேராசிரியர் முது முனைவர் அழகுராஜா பழனிசாமி நேரில் வாழ்த்து

நிலக்கோட்டையை சேர்ந்த, என்னுடைய அண்ணன் திரு.பாலசுப்பிரமணியம் சித்திரவேல், திருமதி.இந்திரா தம்பதிகளின் மகனும், எனது மகனுமான இந்திர குல சத்திரிய வம்சத்தில் பிறந்த சி.பி.ஆதிஷ் MBA, தேவேந்திர குல வேளாளர், வகையரா மற்றும் மணமகள் அட்சயா MBA, ஐயங்கார் திருமால் வகையரா ஆகிய இருவருக்கும் இரு விட்டார் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு

 மதுரையில், EMAR மஹாலில், திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதில் நான் பங்கேற்று மகனையும் மற்றும் மருமகளையும் சென்று வாழ்த்தி விட்டு பங்கேற்ற சிறப்பான தருணம் என்னுடன் திண்டுக்கல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார், செந்தில் மற்றும் வழக்கறிஞர் ஜெகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குறிப்பு இதில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கும் திருமால் ஐயங்கார் வகையாறுக்கும் உள்ள தொடர்புகளை பற்றி உள்ளது.
தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில் திருக்கோஷ்டியூரில் அமைந்துள்ள “அருள்மிகு சௌமிய நாராயணப் பெருமாள்” திருக்கோயிலின் திருத்தல வரலாறு நூலில் ஓர் குறிப்பு உள்ளது. அதாவது, திருமால் அவதாரத்தில் சிறப்பு பெற்ற பிரகலாதன் வழியில் தோன்றிய மகாபலிச் சக்கரவர்த்தி அசுரகுலத்தின் குருவான சுக்ராச்சாரியருடன் சேர்ந்து சதிச் செயல்களால் இந்திரனின் இந்திரலோகத்தைக் கைப்பற்றத் திட்டமிட்டு, சுக்கிராச்சாரியார் உடன் சேர்ந்து, அசுவமேத யாகம் செய்தனர்! அதனால், இந்திரன் இந்திரலோகப் பதவியையும் இழக்கும் அபாயம் ஏற்பட்டது! ஆதலால், இந்திரனைப் பெற்ற தாயான அதிதி சொல்லொண்ணாத் துயரம் கொண்டு, கசியப்பரிடம் முறையிட்டதன் விளைவாக, திருமாலின் அருளைப் பெறுவதற்காகவே 12 நாட்கள் “பயோவிரதம்” மேற்கொண்டாள் இந்திரனின் தாய் அதிதி! 12 நாடகள் இறுதியில் சங்குச் சக்கரத்துடன் திருமால் காடசியளித்து, “கசியப்பர் மூலமாக உனது கருவில் ஆண் மகனாக உருவெடுத்து, “உபேந்திரனாக”, *இந்திரனின் தம்பியாகப் பிறப்பெடுத்து, இந்திரன் பதவியையும், இந்திரலோகத்தையும் காப்பேன்! ” என்று திருமால் உறுதியளித்துள்ளார்! அதுவே, உபேந்திரன் என்ற “வாமனர் அவதாரம்” ஆகும்.* பிரகலாதனின் பேரனாகத் தோன்றிய மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்கியதுடன், இந்திரனின் பதவியை காத்தல்  நிகழ்வே திருமால் அவதாரமான வாமனர்.

அன்புடன்

 பேராசிரியர்
 முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை