விவசாயிகள் கோரிக்கையை ஏற்று கொத்தங்குடி அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் துவக்கம்
தஞசாவூர் செப் - 7
பாபநாசம் தாலுக்கா
கொத்தங்குடி பகுதியில் குறுவை அறுவடை பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் கொத்தங்குடி அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் விற்பனை செய்ய முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
குறுவை அறுவடைநெல்லை கொள்முதல் செய்ய கொத்தங்குடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டுமென கொத்தங்குடி பகுதி விவசாயிகள் ஊராட்சி மன்ற தலைவர் இரா.பழனி வாயிலாக நுகர்பொருள்வாணிப கழக அதிகாரிகளிடம் வலியுறுத்தி வந்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, நேற்று கொத்தங்குடி அரசு கொள்முதல்நிலையம் விநாயகர் பூஜையுடன் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணி தொடங்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கை ஏற்று கொள்முதல்நிலையம் திறக்க நடவடிக்கை எடுத்த நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளுக்கும் ஊராட்சி மன்ற தலைவருக்கும் விவசாயிகள் நன்றி பாராட்டினர்.