சாலியமங்களம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
செப்.22-
தஞ்சை மாவட்டம். அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடத்தை தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அரசு கொறடா கோவி.செழியன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் முத்துச்செல்வன், அம்மாபேட்டை ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன், ஒன்றியக்குழு துணை தலைவர் தங்கமணிசுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், அமானுல்லா, சாலியமங்களம் ஊராட்சி மன்ற தலைவர் சக்திசிவக்குமார், துணை தலைவர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதி சன் சரவணன் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.