மதுரை பழங்காநத்தம் அ.தி.மு.க பொதுக் கூட்டம் நடைபெரும் இடத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஸ்பீக்கர் டவர்
மதுரை செப் - 28
மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே அ.தி.மு.க தற்காலிக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்ள இருக்கும் பொதுக் கூட்டம் நடைபெரும் மேடைக்கு அருகே "நடு முச்சந்தியில்பிரமாண்ட ஸ்பீக்கர் வைக்கும டவர் " ஒன்று தற்போது வைக்கப்பட்டு வருகிறது இந்த செயல் ரோட்டில் செல்லும் பாதசாரிகளுக்கும், வாகன ஒட்டிகளுக்கும் மிகவும் அச்சுறுத்தும்படி உள்ளது உடனே காவல்துறை கவனத்தில் கொண்டு அதை அப்புறபடுத்தும்படி பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர் செய்யுமா காவல்துறை?