தமிழகத்திலுள்ள உழவர் சந்தைகளில் ஏழை எளிய விவசாயிகள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக விற்பதற்கு கண்காணிப்பு குழு அமைத்து தொடர்ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுகிறார் சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி
தமிழகத்தில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், தேங்காய் உள்ளிட்ட வேளாண் விளை பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14ஆம் தேதி தமிழகத்தில் முதல் உழவர் சந்தையினை முத்தமிழறிஞர், தலைவர், டாக்டர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உழவர் சந்தைகள் வேகமாக திறக்கப்பட்டன. விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்கள் நேரடியாக விற்பனை செய்யப்படுவதன் மூலம் அதிக லாபம் கிடைத்ததால் விவசாயிகள் இடையே உழவர் சந்தை திட்டம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பாளையங்கோட்டை மகாராஜ நகர், மேலப்பாளையம், டவுன் ,கண்டியப்பேரி மற்றும் அம்பை ஆகிய நான்கு இடங்களில் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் விதி 110 கீழ் தமிழகம் முழுவதும் மேலும் 10 உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என அறிவித்தார் அதன்படி நெல்லையில் மேலும் ஒரு உழவர் சந்தை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ஐந்தாவது உழவர் சந்தை நெல்லை மாவட்டத்தில் பாளை என் ஜி ஓ காலனியில் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டது கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்த உழவர் சந்தையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள் மற்றும் பழங்களை நேரடியாக விற்பனை செய்யும் பொருட்டு 16 கடைகள் அமைக்கப்பட்டுள்ளது மேலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை பாதுகாக்க வைப்பதற்கு ஒரு குளிர் பதன கிடங்கு அமைந்துள்ளது. நெல்லையில் மாநகர் பகுதியில் 3 உழவர் சந்தைகள் அமைந்துள்ளது இதில் மகாராஜா நகர் சந்தையில் மட்டுமே குளிர் பாசன கிடங்கு உள்ளது .தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள உழவர் சந்தையிலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன . இதன் மூலம் ரெட்டியார்பட்டி, இட்டேரி பருத்திப்பாடு தருவை, முத்தூர் கருங்குளம், முன்னீர் பள்ளம், டக்கரம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது பொருட்களை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் இந்த புதிய உழவர் சந்தையால் என்.ஜி.ஒ காலனியில் ரெட்டியார்பட்டி திருமால் நகர், பொதிகை நகர், பெருமாள் புரம் பகுதி பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறி பழங்களை வாங்கலாம்.
பாளை என் ஜி ஓ காலனி புதிய உழவர் சந்தை பணிகள் ஐந்து மாதங்களில் முடிந்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது அதன்படி ஐந்து மாதங்களில் அனைத்து பணிகளும் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது கடந்த எட்டாம் தேதி நெல்லையில் நடைபெற்ற விழாவில் மாவட்டத்தில் முடிவடைந்த வளர்ச்சி பணிகள், புதிய திட்ட பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார் . அப்போது என் ஜி ஓ காலனி புதிய உழவர் சந்தை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அது திறக்கப்படவில்லை ஒரு சில பணிகள் முடியடையவில்லை என்று தெரிய வருகிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கும் பெரிதும் பயன்படும் வகையில் கட்டப்பட்டுள்ள புதிய உழவர் சந்தையை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்க வேண்டும் என்பதே விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது. இது மட்டுமல்லாமல் உழவர் சந்தையில் உண்மையான கிராமப்புறத்தில் விவசாயம் செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்ததை தாங்களே உழவர் சந்தையில் கொண்டு விற்பனை செய்ய வேண்டும் .அது மட்டும் இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள அதிகப்படியான உழவர் சந்தைகளில் விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த பொருட்களை உழவர் சந்தையில் ஓரமாக உட்கார்ந்து விற்பனை செய்கின்றனர். ஆனால் அங்கு விவசாயம் செய்யாமல் இருக்கும் இடைத்தரகர்கள் அந்தந்த கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர்களை சந்தித்து 10 (1) அடங்கல்களை தவறுதலாக பெற்று நாங்களும் விவசாயிகள் தான் என்று கூறி வெளி மார்க்கெட்டில் சந்தையில் காய்கறிகள் பழங்கள் அனைத்தையும் வாங்கி உழவர் சந்தையில் தங்களுக்கு என்று ஒரு இடத்தை வாங்கி விற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் விவசாயிகள் கிடையாது பொதுவாக எடுத்துக் கொண்டால் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் வெங்காயம் கிலோ 40 ரூபாய் என்று எடுத்துக் கொண்டால், மொத்தமாக கிடைக்கும் வண்டியில் கிலோ விலை 35 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது .ஆனால் உழவர் சந்தையில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது இதுதான் உழவர் சந்தைக்கும் மொத்த வியாபாரி சந்தைக்கும்,சூப்பர் மார்க்கெட்டுக்கும் உள்ள வித்தியாசமாகும்.
விவசாயிகள், தங்களது விளைநிலத்தில் விளையும் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக பொதுமக்களிடம் விற்பனை செய்ய, முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞரால் தொடங்கப்பட்ட உழவர் சந்தைகள் தற்போது வரை வெற்றிகரமாக செயல்படுகிறது. கடந்த காலத்தில் வியாபாரிகள், இடைத்தரகர்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யும் காய்கறிகளை சந்தைகளில் கூடுதல் விலைக்கு விற்றனர். அதனால், காய்கறிகள், பழங்கள் ஏழை மக்களுக்கு எட்டா உணவாகிவிட்டது. குழந்தைகளுக்கு சத்து குறைபாடுகள் ஏற்பட்டது. பெண்களுக்கு ரத்தசோகை ஏற்பட்டது. இதை அறிந்த அப்போதைய முதல்வர் தலைவர் கலைஞர் நினைவில் உதித்ததுதான் உழவர் சந்தை திட்டம். விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள், தேங்காய் உள்ளிட்ட வேளாண் விளைப்பொருட்களை இடைத்தரகர்கள், வியாபாரிகள் குறுக்கீடு ஏதும் இல்லாமல் நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யும் வகையில், உழவர் சந்தை திட்டம் தொடங்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் தேதி, நேரு பிறந்த நாளன்று முதல் உழவர் சந்தையை மதுரை அண்ணா நகரில் கருணாநிதி தொடங்கி வைத்தார். இந்த உழவர் சந்தை தற்போது வரை 19 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுகிறது. அதன் பிறகு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல உழவர் சந்தைகள் வேகமாக திறக்கப்பட்டன. சென்னை பல்லாவரத்தில் 100 ஆவது உழவர் சந்தையை கருணாநிதி வைத்தார். மற்ற காய்கறி கடைகளின் விலையை விட, உழவர் சந்தையில் வேளாண் பொருட்கள் விலை குறைவாக கிடைத்ததால் பெரும்பாலானோர் உழவர்சந்தைகளுக்கு சென்றதால் நல்ல வரவேற்பை பெற்ற திட்டமாக உருவெடுத்து, தற்போது வரை செயல்பட்டு வருகிறது.
தற்போது வரை தமிழகத்தில் சுமார் 180 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மற்ற இடங்களை விட உழவர் சந்தைகளில் விலை குறைவு என்பதால் நுகர்வோர் மத்தியிலும் பெரும் வரவேற்பு ஏற்பட்டது. 2008ம் ஆண்டு டிசம்பரில் அது 2.09 லட்சமாகவும், கடந்த ஆண்டில் 2.65 லட்சமாகவும் அதிகரித்துள்ளது. உழவர் சந்தைக்கு வந்த காய்கறிகளின் வரத்தும், நுகர்வோர் வரவும் அதிகரித்துள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட 103 உழவர் சந்தைகளோடு இப்போது நிறுவப்பட்ட 45 சந்தைகளையும் சேர்த்து, மொத்தம் 148 சந்தைகள் உள்ளன. அதில், 59 உழவர் சந்தைகள் மிகவும் நன்றாகவும், 23 சந்தைகள் நன்றாகவும், 30 சந்தைகள் ஓரளவு நன்றாகவும், 22 உழவர் சந்தைகள் நலிந்த நிலையிலும், 14 சந்தைகள் மிகவும் நலிந்த நிலையிலும் நடைபெறுவதாகக் கண்டறியப்பட்டுள்ளன. நலிந்த நிலையிலும், மிக நலிந்த நிலையிலும் இயங்கி வருகின்ற உழவர் சந்தைகளை மேம்படுத்துவதற்கான பணியில் அரசு இயந்திரம் செயல்பட வேண்டும். குறைந்த விலையில் மளிகை பொருட்கள் வாங்கிட கோவையில் மாலை நேர உழவர் சந்தையை முதல்வர் திறந்து வைக்கிறார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் கோவையில் உழவர் சந்தைகள் கொண்டு வரப்பட்டது. ஆனால் கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் உழவர் சந்தைகள் கண்டுகொள்ளப்படவில்லை. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் உழவர் சந்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் அ.தி.மு.க. ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த உழவர் சந்தைகள் பல்வேறு வசதிகளுடன் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு தமிழகம் முழுவதும் 100 உழவர் சந்தைகள் செயல்பட துவங்கி உள்ளன. இந்த சந்தைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை செயல்படுகிறது. இந்நிலையில் மாலை நேரங்களிலும் உழவர் சந்தைகள் செயல்பட ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன் படி தமிழகம் முழுவதும் மாவட்டத்திற்கு ஒரு உழவர் சந்தை என 37 மாலை நேர உழவர் சந்தைகள் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட உள்ளன. இதனிடையே தமிழகம் முழுவதும் மாலை நேர உழவர் சந்தைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரும் 12ம் தேதி திறக்க வைக்க உள்ளார். அதன் படி கோவை மாவட்டத்தில் ஆர்.எஸ்.புரத்தில் மாலை நேர உழவர் சந்தை செயல்பட உள்ளது.
திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டமான உழவர் சந்தைகள், கடந்த ஆட்சி காலங்களில் பராமரிப்பின்றி காணப்பட்டது. தற்போது, அவற்றை புனரமைக்கவும், தமிழகத்தில் மேலும், 120 உழவர் சந்தைகளை ஏற்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக வேளாண் துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். தமிழகத்தில் பராமரிப்பின்றி காணப்படும் உழவர் சந்தைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், மேலும் புதிதாக 120 உழவர் சந்தைகள் அமைக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ‘முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, மக்கள் எதிர்பாரத பல சலுகைகளையும் வழங்கி வருகிறார். திமுக ஆட்சியில் கோவையில் நடத்தப்பட்ட செம்மொழி மாநாட்டை நினைவு கூறும் விதமாக, 2010-ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது 8 கோடி செலவில், செம்மொழி பூங்காவை உருவாக்கினார். தற்போது, இது போன்ற பூங்காங்களை தமிழகத்தின் பல பகுதிகளில் ஏற்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டமான உழவர் சந்தைகள் கடந்த ஆட்சி காலங்களில் பராமரிப்பின்றி காணப்பட்டது. தற்போது, அவற்றை புனரமைக்கவும், தமிழகத்தில் மேலும், 120 உழவர் சந்தைகளை ஏற்படுத்தவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தாலும், அது தொடர்பான முக்கிய முடிவுகள் ஆலோசனைக்கு பின் எடுக்கப்படும். புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் சொன்னதை செய்வார்’ என்றார். தமிழகத்திலுள்ள உழவர்சந்தைகளை இடைத்தரகளின்றியும், விவசாயிகள் நேரடியாக பயன்பெறும் வண்ணம் செயல்படுவதற்கும், புதிதாக அமைக்கப்பட்ட பாளை உழவர் சந்தையை விரைவவாக செயல்பாட்டுக்கு கொண்டுவர திராவிட மாடலின் மாண்புமிகு மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இதில் உடனடியாக தலையிட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உழவர் சந்தைகளையும் தமிழ்நாட்டு அளவில் ஒரு கண்காணிப்பு குழு ஒன்றை அமைத்து உண்மையான விவசாயிகளை கிராமங்களில் கண்டறிந்து அவர்கள் உண்மையில் காடுகளில் காய்கறி வேளாண் பொருட்களை உற்பத்தி செய்கின்றனரா என்று ஆராய்ந்து அவர்களிடம் கிராம நிர்வாக அலுவலர்கள் 10 (1) அடங்கல்களை வாங்கிவிட்டு பின்பு வேளாண்மை அலுவலக ஒப்படைத்து அவர்களுக்கு மட்டும் உழவர் அட்டை வழங்கி உழவர் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் இடைத்தரகர்களை உள்ளே விடாமல் அவர்களை வெளியேற்றி குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் அப்படி எடுத்தால் தான் ஏழை எளிய சிறு, குறு விவசாயிகள் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் அவர்களின் ஆசை நிறைவேறும். ஏழைகள் உற்பத்தி செய்யும் வேளாண் உற்பத்தி பொருட்களை அவர்களே வந்து உழவர் சந்தையில் விற்பனை செய்து அந்தந்த குடும்பங்களை வாழ வைக்க தான் இத்திட்டத்தை தமிழக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி கொண்டு வந்தார் அதனை இன்றைய திராவிட மாடலின் மாண்புமிகு மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இதனை நடைமுறைப்படுத்தி நிறைவேற்ற வேண்டும் என்று சிறு குறு விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.