தஞ்சை மாவட்டம் பாபநாசம் பண்டாரவாடை கிரசண்ட் மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மருத்துவர்கள், போலீஸ் டி.எஸ்பி பங்கேற்பு..


தஞ்சாவூர் மாவட்டம், செப்-17

 பாபநாசம் ஊராட்சி ஒன்றியம், பண்டாரவாடை கிரசெண்ட் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில்  மது,போதை ஒழிப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் கோமதி அனைவரையும் வரவேற்று பேசினார். 
பள்ளி நிர்வாகக்குழு  தலைவர் முகமது ஜபுருல்லா தலைமை வகித்தார்.  தாளாளர் முகமதுபாட்சா, அப்துல்ஜப்பார் ஆகியோர் முன்னிலை வகித்தார். பள்ளி தமிழாசிரியை கலையரசி உறுதிமொழி வாசித்தார்.
பள்ளியின் நிர்வாக அலுவலர் சி.கரிகாலன், துவக்கவுரை நிகழ்த்தினார்.
இதில் 
 பாபநாசம் காவல் கண்காணிப்பாளர் பூரணி, மனநல மருத்துவர் இக்பால் சரிப் ஆகியோர்   கலந்து கொண்டு  மது போதை பொருட்களினால் உண்டாகும் பாதிப்புகள், தீமைகள் குறித்து விரிவாக  எடுத்துரைத்தனர். 
 இந்த கருத்தரங்கில் பள்ளி நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள்,   ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் ஆசிரியர் கென்னடி  நன்றி கூறினார். ஏற்பாடுகளை கிரசென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை