நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அறிவுத்திறன் வகுப்பறை எனப்படும்* ஸ்மார்ட் கிளாஸ் விரைவாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி...
திராவிட மாடலின் மக்கள் முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களும், பள்ளிக்கல்வித்து றை அமைச்சர் அவர்களும், 'நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் அறிவுத்திறன் வகுப்பறை எனப்படும்* ஸ்மார்ட் கிளாஸ் விரைவாக அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி...
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்த “ஸ்மார்ட் கிளாஸ்” திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் டெல்லி சென்றபோது அங்குள்ள அரசு பள்ளிகள் சிறப்பாக செயல்படுவதை பார்த்துவிட்டு அதனை தமிழகத்திலும் தொடங்கி வைப்பதற்கான பணிகளை மிக சிறப்பாக தொடங்கிவைத்தது பெரும் வரவேற்பு ற்குரியது.
கல்வியின் துணை கொண்டு உலகை வெல்ல துடிக்கும் மாணவ,மாணவிகளுக்கு தந்தையின் பேரன்போடு என்றும் துணை நிற்பேன் என்று கூறியதோடு, நான் முதல்வன் திட்டத்தை தமிழகத்தில் அறிவித்து மிக சிறப்பாக செயல்படுத்தி வரும் திராவிட மாடல் முதல்வர் மு.க . ஸ்டாலின் அவர்கள் ,
பள்ளி பயிலும் மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் பள்ளியில் உள்ள வகுப்பறைகளில் அறிவுத்திறன் வகுப்பறை எனப்படும் ஸ்மார்ட் கிளாஸ்
திட்டத்தை அமைத்தால் அதன் மூலம் மாணவ,மாணவிகள் உயர் கல்வி படிப்பது அதிகரிக்கும். இதற்காக தமிழகத்தில் அடுத்த 4 ஆண்டுகளில் ரூ 150 கோடியில் பள்ளியிலும் ஸ்மார்ட் வகுப்பறை ஏற்படுத்தப்படும் என்றார் திராவிட மாடல் மக்கள் முதல்வர்.
அதற்கு முன்மாதிரியாக திருநெல்வேலி மாவட்டம் *ராதாபுரம்* தொகுதியில் மட்டும் 88 அரசு பள்ளிகளிலும் ( துவக்க, நடுநிலை , உயர்நிலை,மேல்நிலை ) மற்றும் 200 அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் உயர்தர அறிவுத்திறன் வகுப்பறை எனப்படும் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்துவரும் சபாநாயகர் திரு.அப்பாவு அவர்கள்,தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும், தனியார் கம்பெனிகளின் சமூக பாதுகாப்பு திட்ட நிதியிலிருந்தும் ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் 30% நிறைவேற்றப்பட்டு, மாணவ, மாணவியருக்கு அர்ப்பணிக்கப்பட்டு வருவது பாராட்டுக்குறியது.
இதை முன் உதாரணமாகக் கொண்டு பள்ளிக் கல்வித் துறை, ஆணையர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையில் தமிழகத்தில் உள்ள 38 மாவட்டத்திற்கும் போதுமான எம்.பி ,எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாகவும், அதிக நிதிகள் தனியார் பொது நிறுவனங்கள் ஆன TNPL, Airport ,கூடங்குளம் அணுமின் நிலையம், நெய்வேலி NlC, LNT, HCL இன்னும் இது போன்ற அதிகப்படியான பொது நிறுவனங்களில் சமூகப் பாதுகாப்பு திட்டம் கீழ் இதனை செயல்படுத்தலாம் இதனை ஊக்கப்படுத்த வேண்டும் தமிழக அரசு. இதனை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள தனி பொது நிறுவனங்கள் 20 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் நிறுவனங்கள் அந்த ஊரின் அருகில் உள்ள பள்ளிகளுக்கு உதவலாம் குறிப்பாக எடுத்துக் கொண்டால் கரூரில் உள்ள TNPL நிறுவனத்தை எடுத்துக்கொண்டால் விவசாயிகளுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தில் 60 கோடிக்கு மேல் வழங்குகிறது. திருநெல்வேலி கூடங்குளம் 15 கோடி வழங்குகிறது. இதுபோல் அனைத்து தனியார் பொது நிறுவனங்களின் பங்களிப்பு மிக அதிக அளவில் இருக்க தமிழக அரசு ஒரு குழு ஒன்றை அமைத்து அந்தந்த தனியார் நிறுவனம் பேசி பள்ளிகளுக்கு தேவையான ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பு அறைகள் தொடங்குவதற்கு அந்த நிதியை பயன்படுத்தி தமிழக முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் 100% வெற்றிடச் செய்ய வேண்டும் அப்போதுதான் தமிழக மாணவர்கள் கணினி எல்இடி, பிரசன்டேஷன் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்படிப்பு படித்து புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதற்கு தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள். வேறு நிதிகள் மூலமாகவும் நிதி திரட்டி மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் எளிதிலும், விரைவிலும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும், திராவிட மாடல் அரசின் திட்டம் விரைவில் மாணாக்கருக்கு சென்றடைந்தது என்ற செய்தி நமது திராவிட மாடல் அரசு இந்தியாவிற்கே முன்மாதிரியான அரசாக திகழ்கிறது என்பதை உறுதிபடுத்தும் விதமாக திராவிட மாடலின் மாண்புமிகு மக்கள் முதல்வர் மு .க. ஸ்டாலின் அவர்கள் விரைவான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்
பேராசிரியர்.
முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி அவர்கள