திண்டுக்கல் PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில். மத்திய கல்வி அமைச்சகத்தின் இன்னோவேஷன் கூட்டம்
திண்டுக்கல் ஆகஸ்ட் 11
திண்டுக்கல் PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில். மத்திய கல்வி அமைச்சகத்தின் இன்னோவேஷன் மற்றும் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி குழுமம்(AICTE) இணைந்து நடத்தும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான இன்னோவேஷன் கவுன்சிலிங் 10வது பிராந்திய சந்திப்பு கூட்டங்கள் நாடு முழுவதும் உள்ள 15 நகரங்களில் ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 29 வரை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தெற்கு மண்டல உயர்கல்வி நிறுவனங்களுக்கான சந்திப்பை நடத்துவதற்கு திண்டுக்கல்PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மத்திய கல்வி அமைச்சகத்தால் தேர்வு செய்யப்பட்டு கூட்டத்தை நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டது.
அதன்படி8.8.2022 அன்று இக்கூட்டம்PSNA கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மற்றும் மாணவ கண்டுபிடிப்பாளர்கள் 118 உயர்கல்வி நிறுவனங்களில் இருந்து பங்கேற்றனர். 20க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கான அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன 150 க்கும் மேற்பட்ட போஸ்டர்கள் கண்டுபிடிப்புகளை விளக்கும் வகையில் நிறுவப்பட்டிருந்தனAICTU ன்AIAL அகாடமி செல்லின் ஆலோசகர் திருமதி. மம்தா ராணி அகர்வால் தலைமை தாங்கி சிறப்பித்தார். தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலிங் செயலாளர் டாக்டர் ஆர் சீனிவாசன் அவர்கள் துவக்க உரை ஆற்றினார்மத்திய கல்வி அமைச்சகம் மற்றும்AICTU ன் உதவி இன்னோவேஷன் டைரக்டர் திரு தீபன் குமார்சாஹி சிறப்புரை ஆற்றினார். 15கும் மேற்பட்ட கல்வியாளர்கள் பல்வேறு தலைப்புகளின் கீழ் உரையாற்றினர். கூட்டத்தின் முடிவில் சிறந்த கண்டுபிடிப்புக்கான அரங்கங்கள் மற்றும் போஸ்டர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன. கல்லூரி சேர்மன் திருமதி தனலட்சுமி அம்மாள் கல்லூரியின் ப்ரோ சேர்மன் ரோடோரியன் திருR.S.K. ரகுராமன் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர்D. வாசுதேவன் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஏற்பாடுகளை சிறப்பாக செய்த கல்லூரி நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.