தஞ்சாவூர் மாவட்டம் இரும்புதலை ஊராட்சியில் கிராமசபா கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், ஆகஸ்ட் 16
அம்மாபேட்டை ஒன்றியத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு கிராமசபா கூட்டங்கள் நடைபெற்றன.
இரும்புதலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராமசபா கூட்டத்தில் கிராம வரவு. செலவு மற்றும் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்த அறிக்கையை ஊராட்சி செயலர் ஜெகத்குரு வாசித்தார்.இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் வள்ளிவிவேகானந்தன் மற்றும் ஊராட்சி துணை தலைவர் மங்கையர்கரசி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.