அதிமுக பொது செயலாளர் நியமனம் செல்லாது ஐகோர்ட் தீர்ப்பு! அய்யம்பேட்டையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வெடி வெடித்து கொண்டாட்டம்.
தஞ்சை மாவட்டம் ஆகஸ்ட் 17
அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து தஞ்சை மாவட்டம், அய்யம்பேட்டையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பசுபதிகோயில் சதீஷ் தலைமையில் கட்சியினர் வெடி, வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் பசுபதிகோயில் முத்து, குணசேகரன், முருகானந்தம், சரவணன், மெலட்டூர் அய்யாபிள்ளை, ராமலிங்கம், கலைநிதி, குமார், சரவணன், அஸ்லம்பாட்சா, ஸ்ரீராம், அடைக்கலம் உள்பட ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கிய சம்பவம் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் புதிய எழுச்சியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.