தஞ்சை மாவட்ட பாபநாசம் அருகே பயணிகள் நிழற்குடை திறப்பு எம்எல்ஏ ஜவாஹிருல்லா திறந்து வைத்தார்.
தஞ்சை மாவட்டம் ஆகஸ்ட் 17
பாபநாசம் தாலுக்கா, பண்டாரவாடையில் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 5.31 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
பாபநாசம் எம்எல்ஏ எம்.எச். ஜவாஹிருல்லா புதியதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பேசினார். இதில் மனிதநேயமக்கள் கட்சி மாநில அமைப்பு செயலர் பாதுஷா, பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதிகண்ணதாசன். திமுக மாவட்ட துணைசெயலர் கோவிஅய்யாராசு ஒன்றிய செயலர் நாசர், மாவட்ட கவுன்சிலர் பாத்திமாராயல்அலி, ஒன்றிய கவுன்சிலர் சத்யாசுர்ஜித், பண்டாரவாடை ஊராட்சிதலைவர் மரியம்பீவிஅப்துல்காதர், உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்த விழாகுழுவினர் நிழற்குடை திறப்பு விழாவை அரசுவிழாவாக நடத்தாமல் கட்சி விழா போன்று மனிதநேய மக்கள் கட்சி கொடிகள் கட்டியிருந்தது பொதுமக்கள் மத்தியிலும், ஆளும்கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.