பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி - தமிழகபாரதிய ஜனதா கட்சி தலைமைக்கும் தமிழக அரசின் மக்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் தேவேந்திர குல வேளாளர்கள் சார்பாக கோரிக்கை
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 10ஆம் நாள் சென்னையில் நடைபெற்ற அரசு விழாவில் தேவேந்திர குல வேளாளர்களைப் பற்றி 10 நிமிடம் பேசி உலகம் முழுவதும் அவர்களைத் தலை நிமிரச் செய்தார். இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பாரதப் பிரதமர் அவர்களுக்குத் தெரியாமல் தமிழகப் பாரதிய ஜனதா கட்சியினர் தேவேந்திர குல வேளாளர்களைப் புறக்கணிக்கின்றனர் மற்றும் அவமதிக்கின்றனர். 2021ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 25ஆம் நாள் கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநாட்டில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கலந்து கொண்டு அங்கும் பத்து நிமிடங்கள் தேவேந்திரகுல வேளாளர்களின் வரலாற்றுச் சிறப்புகளைப் பேசி மகிழ்ந்தார். இந்தியாவில் மொத்தம் 12000 ஜாதிகள் உள்ளன. எந்தவொரு ஜாதியைப் பற்றியும் எந்த ஒரு இடத்திலும் அவர் பேசியது கிடையாது. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் "நீங்கள் தேவேந்திரர் நான் நரேந்திரன்" என்று குறிப்பிட்டார் தேவேந்திரர்களின் பெருமையை உலகெங்கும் பறைசாற்றி நிற்கிறது. நமது தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் மீது பற்று வைத்திருக்கும் பாரதப் பிரதமர் அவர்கள் இந்தியாவில் சுய கவுரவத்தோடு வாழக் கூடியவர்கள் தேவேந்திர குல வேளாளர்கள் என்று குறிப்பிட்டுப் பேசினார். உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் 2015 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த தேவேந்திரர்கள் மாநாட்டில் தேவேந்திரகுல வேளாளர்களின் பெருமைகளை உலக அறிய செய்தார் என்பது அனைவரும் அறிந்தது.
சுதந்திர தினத்தன்று தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிடத்தில் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் படங்களை அக்கட்சியினர் வைத்தனர். ஆனால் அவற்றில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைத் சார்ந்த ஒருவர் படம் கூட இடம்பெறவில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது.
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது. தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளில் ஒருவரான எங்களுடைய முப்பாட்டனார் இந்தியாவின் முதல் துணை பிரதமர் "இரும்பு மனிதர்" மற்றும் "பிஸ் மார்க்" என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல், கவர்னகிரி போர்ப்படை தளபதி சுதந்திரப் போராட்ட தியாகி மாவீரன் சுந்தரலிங்க குடும்பர், நெற்கட்டும் சேவல் போர்படை தளபதி மாவீரன் வெண்ணிக் காலாடி, சுதந்திர போராட்ட தியாகி கொங்கு நாட்டு ராமசாமி மள்ளர் , சுதந்திரப் போராட்ட தியாகி வடிவு மள்ளத்தி , இந்தியாவின் ராணுவ வீரர் சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரன் போன்றவர்கள் ஆவர். ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை இவர்களில் ஒருவரது படத்தைக்கூட சுதந்திரதின நாளன்று கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற படங்களில் இடம்பெறச் செய்யவில்லை.
தமிழகப் பிஜேபி தலைவர்அண்ணாமலை ஐபிஎஸ் பணியில் பார்த்தவர். கர்நாடகத்தில் பணியாற்றியவர். அந்தப் பணிக்கு வருவதற்கு முன்பு உறுதிப்பிரமாணம் எடுத்துக் கொண்டிருப்பார் . அது என்ன என்பது அவருக்கே தெரியும். இருந்தும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயச் சுதந்திரப் போராட்ட தியாகிகள் அவர் கண்ணுக்குத் தெரியவில்லையா? இல்லை தெரிந்தும் தெரியாதபோல் நடிக்கிறாரா... ஏன் அவர்களை போட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வருகிறதா இல்லை யாராவது அவருக்கு தவறான ஆலோசனை வழங்குகிறார்களா ? இதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். தமிழகத்தில் ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் அவரவர் சமுதாயத்தில் உள்ளவர்களை மட்டும் தான் தெரியுமா?
மேலும் பிஜேபியின் தலைமைக்கழக நிர்வாகியான கேசவ விநாயகம் பிள்ளை வேணுமென்றே தேவேந்திர குல சமுதாயத்திற்கு எதிராக சதி செய்கின்றார். இவர்களை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். இவர்களைப் பற்றிய புகார்களை நரேந்திர மோடி அவர்களுக்கும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் நட்டா அவர்களுக்கும் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்தியச் செயலாளர் பி. எல். சந்தோஷ் அவர்களுக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும் நம்முடைய தமிழகத்துடைய தேவேந்திரகுல வேளாளர்களின் மகாகுரு குருமூர்த்தி அவர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். அதாவது தேவேந்திர குல சமுதாயத்தில் உள்ள 150 சங்கங்கள், கூட்டமைப்புகள், அரசியல் கட்சிகள், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலக சங்கங்கள் என அனைத்து அமைப்புகளைச் சேந்தவர்களும் தமிழகத்தில் தேவேந்திர குல சமுதாய மக்கள் ஒதுக்கப்படுகின்றனர் என்பதை புகாராக எழுதி அனுப்ப வேண்டும். இதற்கு முழு காரணம் தமிழகப் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை தலைமைக் கழக நிர்வாகி கேசவ விநாயக பிள்ளை தலைமையிட பாரதிய ஜனதா மாநில அமைப்பாளர் மத்திய இனண அமைச்சர் எல். முருகன் ஆகியோர் தான் என்று வலியுறுத்த வேண்டும். நயினார் நாகேந்திரன் அவர்கள் எம்எல்ஏ ஆவதற்கு திருநெல்வேலி மாவட்ட தேவேந்திரகுல வேளாளர்களின் ஓட்டுகளே உறுதுணையாக இருந்தன. தேவேந்திரர்களின் ஓட்டுக்களை வாங்கி வெற்றி பெற்று அதற்காக தேவேந்திரர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார். தேவேந்திரகுல வேளாளர் இல்லை என்றால் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதியில் நான் வெற்றி பெற்று இருக்க மாட்டேன் என்று அவர் செய்தியாளர் சந்திப்பில்
கூறியிருந்தார் .அவரின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட்டவர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் மகாராஜன் அவர்களே. அதற்காக கட்சியின் சார்பாக அவருக்கு இன்னோவா கார் பரிசளிக்கப்பட்டது. ஆனால் கட்சிக்காக உண்மையாக உழைத்த அவரின் மாவட்ட செயலாளர் பதவி கட்சி தலைமையால் பறிக்கப்பட்டு தற்பொழுது கட்சியின் அடிப்படை உறுப்பினராக மட்டுமே வைக்கப்பட்டுள்ளார். இதற்குக் காரணமாக இருந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில பாரதிய ஜனதா அமைப்பாளர் கேசவ விநாயகம் பிள்ளை மற்றும் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் என இவர்களுக்கு எதிராக தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் .தமிழ்நாட்டில் குறைந்தபட்சம் 10 மாவட்ட தலைவர்களை தென் மாவட்டங்களில் அண்ணாமலை அவர்கள் உடனடியாக நியமன செய்ய வேண்டும். இல்லை என்றால் ஒட்டு மொத்த தேவேந்திரகுல வேளாளர்களும் டெல்லி சென்று முற்றுகைப் போராட்டம் நடத்துவோம். பாரத பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தில் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற வேண்டிய சூழல் இருந்தும் தவறான அணுகுமுறையால் அதாவது தலைமையில் இருந்தவர்கள் அவரவர் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு தொகுதிகளை ஒதுக்கி கட்சியை தோல்வி அடையச் செய்துவிட்டனர். குறிப்பாக எல் .முருகனும் அவரைச் சேர்ந்தவர்களும் தமிழகத்தில் தாமரையை மலர விடாமல் செய்து விட்டனர். ஒரு தொகுதியை மட்டும் ஆதி திராவிடர் சமுதாயத்துக்கு ஒதுக்கிவிட்டு அவர்களில் ஒருத்தர் கூட பாரதிய ஜனதா கட்சியில் இல்லை என்று கூறிவிட்டனர். ஆனால் தமிழகத்தில் 70% தேவேந்திர குல வேளாளர் மக்கள் பாரதிய ஜனதா நோக்கி பயணிக்கின்றனர் என்பது தாங்கள் அறிந்ததே .
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களே உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். உங்கள் கட்சியோடு தோழமையாக இருக்கும் எங்களது சமூகப் போராளி அரசியல் ஆசான் தலைவர் ஜான்பாண்டியன் அவர்களின் ஆலோசனை நீங்கள் கேட்டு இருக்கலாம். அதாவது அவரிடம் உங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகிகள் யார் யார் என்று கேட்டு அவர்களின் படங்களை இடம் பெறச்செய்திருக்கலாம். சமூகப் போராளி ஜான் பாண்டியன் அவர்கள் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுடன் நெருக்கமாகவும் உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்தியாவில் கோமாதாவை தெய்வமாக வழிபடும் ஒரே சமுதாயம் தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் என்பது அனைவரும் அறிந்ததே. முப்பத்துமுக்கோடி தேவர்களுக்கும் தலைவனான இந்திரனின் வம்சாவளியினர் தேவேந்திர குல வேளாளர்கள் ஆவர். தற்பொழுது வடக்கே வன்னியர் தெற்கே தேவேந்திரர் எனும் அரசியல் சக்தியாக வளர்ந்து வரும் தேவேந்திரர்களை எவராலும் அழிக்க முடியாது.
திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டைச் சிறப்பாக நிர்வகித்து வருகிறது. குறிப்பாக தமிழக முதல்வர் அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமாகிய மு .க. ஸ்டாலின் அவர்கள் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திலிருந்து 8 சட்டமன்ற உறுப்பினர்களை உருவாக்கித் தந்துள்ளார். நமது கோரிக்கைகளையும் நிறைவேற்றிக் கொடுக்கிறார் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் அவர்கள். தென்காசி மாவட்ட செயலாளராக தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த செல்லத்துரை அவர்கள் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டு அவரும் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். அதுபோல மாண்புமிகு ஏ .கே .எஸ் விஜயன் அவர்கள் மாநில விவசாய அணிச் செயலாளராக உள்ளார். அத்தோடு தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக ஓராண்டு சிறப்பாகப் பணிசெய்து அதன்மூலம் இரண்டாவது ஆண்டும் பணிநீடிப்பு பெற்றுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இது வரலாற்றுச் சிறப்புமிக்கது .நமது சமுதாய மக்களுக்கு மாநிலத்தில் உள்ள முக்கிய துறைகளில் உயர் பதவிகளை வழங்கியுள்ளார் முதல்வர் அவர்கள். குறிப்பாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் வேளாண்துறை முதன்மைச் செயலாளர், கால்நடை, மீன்வளம், பால்வளத் துறை முதன்மைச் செயலாளர் , மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், உளவுத்துறை காவல் கண்காணிப்பாளர், உதவி ஆணையர், காவல் துறை கண்காணிப்பாளர் லஞ்ச ஒழிப்பு துறை ஆகிய உயர் பதவிகளை முதல்வர் அவர்கள் வழங்கியுள்ளார். மேலும் சட்ட ஒழுங்கு DIG போன்ற பணிகளை ஒதுக்கி கொடுத்துத் தேவேந்திர குல வேளாளர்களின் நேர்மையைப் போற்றி வருகிறார். கலைஞர் அவர்கள் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு எந்த அளவிற்குச் செய்தாரோ அதை விட ஒரு படி மேலாக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் அவர்களுக்குச் செய்து வருகிறார் .அதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தேவேந்திர குல மக்கள் திராவிட மாடல் அரசின் மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குக் கோரிக்கை வைக்க முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்ததன் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களும் கூட்டமைப்புகளும் அரசியல் கட்சிகளும் தேவேந்திர குல மக்களும் அடுத்த மாதம் செப்டம்பர் 11ஆம் தேதி நடைபெறும் சுதந்திரப் போராட்ட தியாகி இமானுவேல் சேகரனார் அவர்களின் குருபூஜை விழாவை அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை வைக்கின்றனர். தமிழக முதல்வர் அவர்களே தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் இக்கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்தால் தாங்கள் தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர். திராவிட முன்னேற்றக் கழகமும் நூறு ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கும். மேலும் சுதந்திரத்துக்காகப் போராடிய சுதந்திரப் போராட்டத் தியாகி வாசுதேவநல்லூர் அருகிலுள்ள நெற்கட்டும் சேவல் மாவீரன் போர்படை தளபதி வெண்ணி காலாடி அவர்களுக்கும் கொங்கு நாட்டு மாவீரன் சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி பன்னாடி அவர்களுக்கும் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டி அரசு விழா கொண்டாட வேண்டும். இது தேவேந்திரகுல சமுதாய மக்களால் ஐயா கலைஞர் காலத்தில் இருந்து முன் வைக்கப்படும் கோரிக்கையாகும். இதனை தங்கள் ஆட்சி காலத்தில் செய்து கொடுக்க வேண்டும். அப்படி செய்து கொடுக்கும் போது தமிழகத்தில் உள்ள அனைத்துத் தேவேந்திர குல வேளாளர்களும் அதாவது 100% தேவேந்திர மக்களும் தங்கள் ஓட்டுக்களை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே அளிப்பார்கள். இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 10ஆம் தேதி சென்னையில் அரசு விழாவில் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைப் பற்றி 10 நிமிடங்கள் பேசியதோடு அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தைக் கொடுத்து அதாவது ஏழு உட்பிரிவுகளை இணைத்துத் தேவேந்திர குல வேளாளர் சட்டத்தை இயற்றிப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதல் பெற்று அதனை இந்திய அரசு நாள் இதழில் வெளியிட ஆவனம் செய்தார். அதுபோல திராவிட மாடலின் மக்கள் முதல்வர் ஆகிய நீங்கள் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இதனை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்று மக்கள் உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அத்தோடு பட்டியல் வெளியேற்றத்திற்கு மாநிலத்தில் உயர் மட்ட குழு ஒன்றை அமைத்து தமிழகத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர் மக்களின் அனைத்து ஊர்களிலும் அக்குழு விசாரணை செய்து தங்களின் பார்வைக்கு ஆய்வுகளை அனுப்பி வைத்து அதனை தாங்கள் ஒருமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பி விட்டீர்கள் என்றால் தமிழகத்தில் இன்னும் இருநூறு ஆண்டுகளுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தை எவராலும் அழிக்க முடியாது. உங்களுடைய பெயர் தமிழகத்தின் பொன் ஏடுகளில் மட்டுமன்று தமிழகத்தில் உள்ள தேவேந்திர குல வேளாளர்களின் குழந்தைகளின் பெயர்களாகவும் இருக்கும்.குறிப்பாக தங்களின் பெயரையும் தங்களின் தந்தையார் பெயரையும் தங்களின் மகன் பெயரையும் தேவேந்திர குல குழந்தைகளுக்குச் சூட்டுவோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதுபோல ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகர்னார்க்கு ஆண்டு தோறும் செப்டம்பர் 11ஆம் தேதி நினைவு தினத்தன்று 5 லட்சம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் கூடுவதை அனைவரும் அறிந்ததே, அனைத்து செய்திகளில் வெளிவருகிறது யாருமே கேட்காத சமுதாய மக்களுக்கெல்லாம் வாரி வழங்கிய வள்ளல் குடை நீங்கள் சுதந்திர போராட்ட தியாகி இருக்கலாம். எந்த சமுதாயமும் கேட்காமலே அவர்களை அரசு விழாவாகவும் மணிமண்டபம் கட்டிக் கொடுத்து. அந்த சமுதாயத்திற்கு நல்லது செய்யும் திராவிடம மாடல் அரசின் மக்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களே அதேபோல் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் நீண்ட நாள் கோரிக்கையான சுதந்திரப் போராட்ட தியாகிகளின் அரசு விழாவாக அறிவித்து மற்றும் மணிமண்டபம் கட்டித்தர அன்புடன் எங்கள் மக்கள் முதல்வர் ஆகிய உங்களுக்கு கோரிக்கை வைக்கின்றோம்.அதை என்னுடைய நிலைப்பாடும் தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் இளைஞர்களின் நிலைப்பாடும் ஒன்றுதான். தமிழக அரசு எவ்வளவோ பரவாயில்லை. ஏனெனில் நமது போர்படை தளபதி மாவீரன் சுந்தரலிங்க குடும்பர் படத்தைச் சுதந்திர போராட்ட தியாகிகளின் படங்களோடு இடம்பெறச் செய்துள்ளதுள்ளது. இது ஒரு விதத்தில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்குத் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தின் சார்பாகவும் என்னுடைய சார்பாகவும் நன்றிகளை விடியல் அரசுக்கும் திராவிட மாடலின் மக்கள் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் பாதம் பணிந்து நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சமூகச் சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி
தமிழகபாரதிய ஜனதா கட்சி தலைமைக்கும்
தமிழக அரசின் மக்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு தேவேந்திர குல வேளாளர்கள் சார்பாக கோரிக்கை