தஞ்சை மாவட்டம் பிராந்தை கிராமத்தில் தொடர்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பல நூறு ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் பாதிப்பு
தஞ்சாவூர் மாவட்டம், ஆக 26
பாபநாசம், மெலட்டூர், திருக்கருகாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் ஆலங்குடி பகுதியில் பிராந்தை கிராமத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த பல நூறு ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் அருகில் உள்ள களக்குடி அரசு கொள்முதல்நிலையம் இன்னும் திறக்கப்படாததால்
குறுவை முன் பருவத்தில் நடவுசெய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடை பருவம் தாண்டியும் அறுவடை செய்யாததால் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்த மழையால் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்து வீணாகி வருவது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது தொடர்ந்து மழை நீடித்தால் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி அழுகி வீணாகி மகசூல் குறைந்து விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என்பதால் களக்குடி அரசு கொள்முதல் நிலையத்தை உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.