புதுக்கோட்டை மாவட்டம் கந்தரவக்கோட்டை ஒன்றிய குறுவள மையத்தில் ஆசியர்களுக்கான ஆலோசனை கூட்டம்...
புதுக்கோட்டை ஆகஸ்ட் 30
கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் 340 ஆசிரியர்களுக்கான ஆலோசனை நடைபெற்றது.
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆங்கிலம், அறிவியல்,கணிதம் ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டத்தை வட்டாரக் கல்வி அலுவலர் ஆ.வெங்கடேஸ்வரி தொடங்கி வைத்து பேசியது.இக் கூட்டத்தில் கலந்துரையாடக்கூடிய கருத்துக்களை மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் எனவும், ஒவ்வொரு பாடத்தையும் மாணவர்களுக்கு எளிய வழியில் கற்பிக்க வேண்டும் எனவும் கூறினார்.
தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கந்தரவகோட்டை (ஆண்கள் மற்றும் பெண்கள்) ஆகிய குறுவள மையங்களை சேர்ந்த ஆசிரியருக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அக்கச்சிப்பட்டி யிலும்,
மற்ற ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் அரசு உயர்நிலைப்பள்ளிகள், வெள்ளாள விடுதி,புதுநகர், கோமாபுரம், வேலாடிப்பட்டி குளத்தூர் நாயக்கர் பட்டி ஆகிய குறுவள மையங்களிலும் நடைபெற்றது.
தமிழ், சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
புதுக்கோட்டை
மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் ஆனந்தராஜ் , வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு பிரகாஷ் ஆகியோர் பார்வையிட்டனர்.
அடுத்து பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்தலில் பாடவாரியாக உபகரணங்கள் பயன்படுத்துதல், வினாக்கள் கேட்டல், கணிணி பயன்பாடுகள்,
குழு செயல்பாடு எண்ணும் எழுத்தும் பயிற்சியில் கற்பித்தல் உபகரணங்கள் எவ்வாறு பயன்படுத்துதல் என்று குழுவாக கலந்துரையாடினார்கள். ஆலோசனைக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுநர்கள் சுரேஷ் குமார்,பாரதிதாசன் சங்கிலி முத்து, ராஜேஸ்வரி, நந்தினி செய்து இருந்தனர்.
ஏதுவாளர்களாக ஆசிரியர்கள் செயல்பட்டனர். நிறைவாக ஆசிரியர்கள் பின்னூட்டம் தேர்வினை இணையதளத்தில் எழுதினர்.