தமிழகத்தில் பெற்றோர்களை தற்கொலைக்கு தூண்டிய மகன் மற்றும் மருமகள்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழக முதல்வருக்கு பேராசிரியர் முது முனைவர் அழுகுராஜா பழனிசாமி வேண்டுகோள்
தமிழகத்தில் உள்ள பெற்றோர்களை கவனிக்காமலும் தற்கொலைக்கு தூண்டிய மகன் மற்றும் மருமகள்கள் மீது குற்றவியல் நடவடிக்கையான கைது நடவடிக்கை மேற்கொண்டு அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து, பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் திராவிட மாடலின் மக்கள் முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர். முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வேண்டுகோள்
தொட்டபெட்டோ மலை சிகரத்தில் இருந்து 350 அடி பள்ளத்தில் குதித்து மூதாட்டி தற்கொலை தமிழகத்தில் உயர்ந்த மலை சிகரமான நீலகிரி மாவட்டம் ஊட்டி தொட்டபெட்டா மலை சிகரம் உள்ளது இது சிறந்த சுற்றுலா தலமாக வழங்குகிறது. இதில் நேற்று இறந்த மூதாட்டி கோவை தடாகம் ராகவேந்திரா நகரை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி லீலாவதி வயது 62 அவர் கோவையில் இருந்து பஸ் மூலம் ஊட்டிக்கு வந்துள்ளார் அங்கிருந்து ஆட்டோவில் தொட்டபெட்டோ மலை சிகரத்துக்கு வந்துள்ளார் அவர் தற்கொலை செய்யும் முன் ஆதார் கார்டை வைத்துவிட்டு 350 அடி பள்ளத்தில் குதித்துள்ளார் தற்கொலை செய்து கொண்ட காரணம் தெரியவில்லை பெரும்பாலான தற்கொலைகளை குறிப்பிடும் போது மகன் மருமகள் தாய் தந்தையரை பார்த்துக் கொள்வதில்லை. அவர்களுடைய அசையும் அசையா சொத்துக்களை மட்டும் வாங்கிவிட்டு அவர்களை முதியோர் இல்லத்தில் விட்டு விட்டு அவர்கள் சந்தோஷமாக வாழ்கின்றன. இது மிகுந்த மன வேதனை அளிக்கிறது.அம்மா, அப்பா அவர்களை மகன்,மகள், மருமகன் மற்றும் மருமகள் ஆகியோர் எப்படி அவர்களை தன் வாழ்நாளில் கவனித்துக் கொள்ள வேண்டும். இந்தியாவைக் காட்டிலும் தமிழகத்தில் பெரும்பாலானோர் தனது அம்மா,அப்பா வை முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டு ரூபாய் 10,000 முதல் 15,000 வரை பணத்தை கட்டிவிட்டால் அவர்களின் கடமை முடிந்து விட்டது என்று எண்ணிக்கொள்கின்றனர்.அது முற்றிலும் தவறானதாகும்.அம்மா அப்பாவிற்கு பேரன்,பேத்திகளுடன் இருப்பதே சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரும். முதியோர் இல்லத்தில் இருப்பது அவர்களுக்கு மனதளவில் பாதிப்படைய செய்யும். தற்போது வளர்ந்து வரும் குழந்தைகளுக்கும் இதை பார்த்தால் நாளை அவர்களும் இதையே தான் செய்வார்கள். நாளை நமக்கும் இதுதான் நிலைமை என்பதை யோசித்து செயல்பட வேண்டும். அம்மா, அப்பாக்களின் இறுதிக் காலம் பெரும்பாலும் மௌனம், தனிமை, புறக்கணிப்பு நிறைய அம்மா, அப்பா முற்றாக ஓய்வு பெற்று மூலையில் கிடப்பதற்கு முன்னால் சிட்டாகப் பறந்து விட வேண்டும் உயிர் என்று எண்ணுகிறார்கள். தன் முதுமைக்கு தீர்வு மரணமே என்று அவர்கள் மரணத்தை எதிர்பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். தன் கருவை அம்மா பத்து மாதம் தன் வயிற்றில் சுமக்க துவங்கியதிலிருந்து அந்தப் பிள்ளை தனக்கொரு வாரிசை பெற்றுக் கொள்ளும் வரை அப்பா இரவு பகலாக கடுமையாக உழைக்கிறார், தான் பெற்றெடுத்த அத்தனை பிள்ளைகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் உழைத்து உழைத்து ஓடான தந்தையும் பெற்று எடுத்த அம்மா எப்படி நடத்துகிறோம்? அவரை கௌரவமாக வாழ வழி செய்யாமல் மூலையில் இருத்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர். வயதான தாய், தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே வயதான காலத்தில் வாய் திறந்து கேட்கமாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும். நோயான பிள்ளையை கட்டிப்பிடித்து நோயை குணமாக்க துடிக்கும் தந்தை, அந்த தந்தைக்கு வயதான காலத்தில் நோய் வந்து விட்டால் தீண்ட தகாதவராக மாறிப் போய் விடுவது காலத்தின் கொடுமை அல்லவா? தன் பிள்ளைகள் இலக்கை அடைந்து சுதந்திரமாக இந்த பூமியை சுற்றிவர வேண்டும் வேண்டும் என்பதற்காக பல இழுக்குகளை தாங்கி நின்ற தாய்,தந்தையை நெஞ்சில் தாங்குவது நம் கடமை இல்லையா? நீ வாசிக்க வேண்டும் என்பதற்காக பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்ற தாய், தந்தையின் கால்களை நினைத்துப்பார். வாசிக்கும் பழக்கம் தந்தைக்கு இருந்தால் புத்தகத்தை வாங்கி கொடுப்பார்கள்.பிற பிள்ளைகள் விரும்பியதை வாங்கும் போது என் பிள்ளை ஏங்கி நிற்கக்கூடாது என்பதற்காக உன் கைகளில் சில்லறைகளை திணித்த தருணத்தை வாழ்க்கையில் எண்ணிப்பார் மாறாக அவருக்காக ஆகும் செலவை எண்ணி எண்ணி பார்க்காதே சில்லறைச் செலவுகளுக்காக கொஞ்ச பணத்தை கொடு நீ தூங்க வேண்டும் என்பதற்காக தாலாட்டு பாடிய தாய், தந்தையை உன் தூக்கம் கலைந்து விட்டால் மீண்டும் தாலாட்டு பாட தலைமாட்டில் தூங்காமல் கண் விழித்து படுத்து கிடந்த தாய், தந்தையை கடைசி காலத்தில் நிம்மதியாக உறங்குவதற்கு உறவுகளை தயார் செய்து வை அது தான் நிஜ வாழ்க்கை பேரன், பேத்திகளை அவரிடம் இருந்து பிரிக்காதே அவர்கள் நம் தாய், தந்தையால் கொண்டாடப்படும் செல்வங்கள். வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது, தொலைக்காட்சியில் உங்களுக்கு பிடித்ததை ஓடவிட்டு அவர்களை பார்க்கச் சொல்லி வற்புறுத்தாதீர்கள். அவருக்கு பிடித்ததை ஓடவிட்டு நீங்கள் மகிழ்ச்சி அடையுங்கள் அது தான் நம் தாய், தந்தையர்க்கு செய்யும் கடவுள் கொடுத்து வரம் அந்த வரத்தை ஒரு போதும் மறந்துவிடக்கூடாது. மனைவியை இழந்த தந்தையின் தனிமை மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அவர்கள் உயிரோடு இருக்கும் போது தாய், தந்தையர் இருக்கும் வரை சரிவர கவனிக்காமல் இருந்துவிட்டு அவருடைய மறைவிற்குப் பின் அவர்களின் போட்டோக்களை வீட்டில் வைத்து ஆண்டுதோறும் அவர்கள் இறந்த தினத்தன்று அவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிடுவார்கள் என்று தெரிந்து வைத்து அதனை படையலாக வைத்து கிராமத்தில் உள்ள நெருங்கிய உறவினர்களை அழைத்து அன்னதானம் போடுகிறீர்கள். அதற்கு முன்பு ஒரு நிமிடம் யோசிக்க வேண்டும் அவர்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் அவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு என்ன செய்ய முடியுமோ அதை செய்து விட்டால். இந்த எண்ணங்கள் வராது அதுபோக உங்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தினந்தோறும் மூன்று வேளை உணவு கொடுப்பீர்கள். அதில் கூடுதலாக ஒரு கையளவு அரிசியும் ஒரு கையளவு ,காய்கறியும், போட்டால் தாய் தந்தையரும் சேர்ந்து சாப்பிடலாம் என்ற நினைப்பு நம் அடிமனதில் வர வேண்டும். நீங்கள் எப்படி கஷ்டப்பட்டாலும் நீங்கள் பெற்ற குழந்தைகளுக்கு மூன்று வேளை உணவு போடாமல் இருப்பீர்களா? அப்புறம் ஏன் தாய் தந்தையரை ஒரு பாரமாக நினைக்கிறீர்கள்? அவர்கள் உங்களை எப்படி பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்து வளர்த்து உங்களை படிக்க வைத்து இன்றைக்கு ஒரு சமூகத்தில் உங்களை மதிக்க கூடிய வகையில் படிக்க வைத்து உயர்ந்த இடத்தில் வைத்திருக்கிறார்கள், என்றால் அதற்கு முதல் காரணம் உன்னை பெற்றெடுத்த தாய், தந்தையர் என்பதை மறந்து விட வேண்டாம். எத்தனை ஆயிரம் கோடிகள் வந்தாலும், அந்த இடத்தில் உன் கண் முன் நிற்க வேண்டியது தாய், தந்தையே, என்பதை ஒரு போதும் மறந்துவிடக்கூடாது. ஒரு பெண் தன் கணவனை இழந்து விட்டால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளோடு வாழ்ந்து விடுவாள்.ஆனால் தந்தையோ! குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்தவர்,தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மனைவியை இழந்தபின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இதுவெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். உயிரோடு இருக்கும் பொழுது நீ ஒழுங்காக பார்த்தியா என்பதுதான் கடவுளின் கேள்வியாக இருக்கும்.. இதை மகன்கள் மட்டுமல்ல!ஒவ்வொரு மருமகள்களும் எண்ணிப்பார்க்க வேண்டும் நாளை உங்களுக்கும் ஒரு மருமகள் வருவார். அப்போதுதான் உங்களுக்கு ஞாபகம் வரும் தாய்,தந்தையர் மற்றும் மாமா, அத்தை இதை நீங்கள் மறந்து விட வேண்டாம் என்ற உருக்கமான பதிவுடன் மேற்படி லீலாவதி அவர்களின் துர்மரணத்திற்கு பின் உள்ள காரணத்தை சரியான முறையில் விசாரணை செய்து அவருக்கு நீதி கிடைக்கவும் பெற்றோரை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மகனுக்கும் மருமகளுக்கும் வரும் வகையில் மக்கள் முதல்வர் அரசாணை பிறப்பித்தது பெற்றோர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.