பாபநாசத்தில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
தஞ்சை மாவட்டம், .ஆகஸ்ட் 11
பாபநாசம் தாலுக்கா, வங்காரம் பேட்டை அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு மலேசியாவில் பணிபுரிந்துவரும் ஹரிதாஸ் தனது பிறந்தநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினர் சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கீழ வங்காரம் பேட்டை க. பரணிதரன், முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில்
ஹரிதாஸ், கஸ்தூரி ஆகியோர் மாணவர்களுக்கான கல்வி உபகரனங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் 100 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பென்சில், ரப்பர் உள்பட மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் தீபா, சங்கீதா, தையல்நாயகி மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கனகாபரணிதரன் செய்திருந்தார்.