தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம்,கொத்தங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டம்
தஞ்சாவூர் ஆகஸ்ட் - 16
அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம்,கொத்தங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை வகித்தார். இதில்
ஊராட்சி மன்ற துணை தலைவர் குமார் மற்றும் உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், கிராமமக்கள் மகளிர் சுய உதவிகுழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் இந்த கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த அறிக்கை வாசிக்கப்பட்டது. இறுதியில் ஊராட்சி செயலர் தேவி நன்றி கூறினார்.