தஞ்சை மாவட்டம் பாபநாசம் கற்பக விநாயகர் கோயில் மகா கும்பாபிஷேகம்ஏராளமானோர் சாமிதரிசனம்
தஞ்சை மாவட்டம் ஆகஸ்ட் 30
பாபநாசம் துர்கா திருமண மண்டப வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.
கற்பகவிநாயகர் கோயில் ராஜகிரியை சேர்ந்த மறைந்த முன்னாள் அமைச்சர் துரைக்கண்ணு குடும்பத்தினர் சார்பில் கோயில் திருப்பணி வேலைகள் நடைபெற்றுவந்தது. கோயில் திருப்பணி வேலைகள் முழுமையடைந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள்
இன்று அதிகாலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு மூலவர் கோபுர கஷசத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை ராஜகிரி துரை சண்முகபிரபு குடும்பத்தினர் மற்றும் விழாகுழுவினர். செய்திருந்தனர்