நமது தின ஜெயம் நாளிதழ் செய்தி எதிரொலி > மெலட்டூர் அருகே தஞ்சை செல்லும் நெடுஞ்சாலையில் சேதமடைந்த பகுதிகள் சீரமைப்பு வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி


தஞ்சை மாவட்டம், ஆகஸ்ட் 19

பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில்  இருந்து  தஞ்சை  செல்லும் முக்கிய நெடுஞ்சாலையில்  மெலட்டூரில் இருந்து அன்னப்பன்பேட்டை வரையில் நெடுஞ்சாலையில்  10க்கும் மேற்பட்ட இடங்களில்  நெடுஞ்சாலையில், சாலை பிளவுபட்டும், சேதமடைந்தும்  பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது.  அதனால் சாலையில் செல்லும் ஏராளமான நான்கு சக்கர வாகனங்கள் மற்றும்  இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளை தினசரி  சந்தித்து  வந்தனர். மெலட்டூரில் இருந்து அன்னப்பன்பேட்டை வரையில் நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள  பள்ளங்களை உடனடியாக  சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வந்தனர்.  
இதுகுறித்து நமது தின ஜெயம் நாளிதழிலும் மற்ற நாளியிதழ்களிலும் செய்தி வெளிவந்திருந்தது  இதனையடுத்து   நெடுஞ்சாலைதுறை உடனடியாக நடவடிக்கை எடுத்து மெலட்டூரில் இருந்து அன்னப்பன்பேட்டை வரையில் நெடுஞ்சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்கள்  சீரமைக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது.‌  நெடுஞ்சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளங்களை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு வாகன ஓட்டிகள் நன்றி பாராட்டினர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை