தஞ்சை மாவட்டம்மெலட்டூர் ஸ்ரீசித்தி புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோயிலில் திருக்கல்யாண வைபவம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


தஞ்சாவூர் மாவட்டம் ஆகஸ்ட் - 29

பாபநாசம் தாலுக்கா, மெலட்டூரில் எழுந்தருளியிருக்கும் விவாஹ வரம் அருளும் ஸ்ரீசித்தி, புத்தி தெட்சணாமூர்த்தி விநாயகர் கோயில்  இந்த ஆண்டு பிரமோற்சவவிழா  கடந்த 22ந்தேதி திங்கள்கிழமை காலை   விக்னேஸ்வர  பூஜை,  கொடியேற்றத்துடன்  தொடங்கியது. தினசரி சுவாமி பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது 4ஆம்நாள் நிகழ்வாக  சுவாமி வெள்ளி பல்லக்கில்  வீதியுலாவும், 5ஆம் நாள் நிகழ்ச்சியாக  ஓலை சப்பரத்தில் ஸ்சுவாமி விதியுலா நிகழ்ச்சியும்  நடைபெற்றது.

பிரமேற்சவத்தின் 7ம்நாள் நிகழ்ச்சியாக சுவாமி தெட்சணாமூர்த்தி, சித்தி, புத்தியுடன்  திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு பக்தர்கள் சீர்வரிசை தட்டு தாம்பலம் எடுத்து கோவில் வந்தடைந்தனர்  அதனை தொடர்ந்து அக்னிஹோமம் நடைபெற்றது அதனை தொடர்ந்து 
 சுவாமி, அம்பாள்   சித்தி, புத்தியுடன்  திருக்கல்யாணம் வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணம்  வைபவத்தில் திருமணமாகாத மற்றும் திருமணம் தள்ளிபோகும் உள்ளூர் மற்றும் வெளியூரைசேர்ந்த ஏராளமான   பெண்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு மஞ்சள் கயறும், மலர்மாலையும் அணிந்து திருமண பிரார்த்தனை செய்து கொண்டனர். திருக்கல்யாண வைபவத்தை காண ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.  தொடர்ந்து 
 திருக்கல்யாண வைபவம் மற்றும் பிரமோத்சவ  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை   திருக்கோயில்  நிர்வாகி எஸ்.குமார் மற்றும் கிராமவாசிகள்  செய்து இருந்தனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை