தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்துக்கு, துணை வேந்தர் பதவி வழங்கிய, மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கும், மற்றும் மக்கள்முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி > அழகுராஜா பழனிசாமி

சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முது முனைவர்
அழகுராஜா பழனிச்சாமிஅவர்கள், விடுத்துள்ள அறிக்கையில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்துக்கு, துணை வேந்தர் பதவி வழங்கிய, மேதகு தமிழக ஆளுநர் அவர்களுக்கும், மற்றும் தமிழகத்தில்சமூக நீதியை முன்னெடுக்கும் திராவிட மாடலின் மக்கள்முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி

கல்வி ஒன்றே உனக்கு கைமாறும் செய்யும் கருவி என்ற முழக்கத்துடன்,
முத்தமிழ் அறிஞர்,  முன்னாள் முதல்வர் தலைவர் கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் 1998-2000 ஆம் ஆண்டு தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த பேராசிரியர் முனைவர் ஜெகதீசன் அவர்களை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமித்தார். தமிழக வரலாற்றில் இது மிகப்பெரிய மைல்கல்
தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு அதன்பின்பு தமிழகத்தில் எந்த பல்கலைக்கழகத்திலும்  தேவேந்திர குல வேளாளர்கள் துணை வேந்தர்களாக நியமிக்கப்படவில்லை.
அண்மையில் தமிழகத்தில் சமூக நீதியை முன்னெடுக்கும் திராவிட மாடலின் மக்கள் முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின்,   அவர்களின் தலைமையிலான தமிழக அரசு தேவேந்திரகுல வேளாளர் மக்களின் உணர்வுகளை மதித்து  ,சமூக நீதியின் விதையாக கடந்தாண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன் பேராசிரியர் முனைவர் சுந்தர், முதல்வர், சேலம் மேட்டூர் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி கொண்டு இருந்த அவரை தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக துணைவேந்தராக நியமனம் செய்தது தமிழக அரசு. தொடர்ந்து இந்தாண்டு தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சேர்ந்த பேராசிரியர் முனைவர் ஆறுமுகம் அவர்களை திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமன செய்த தமிழக ஆளுநர் அவர்களுக்கும், இதனை பரிந்துரை செய்த  தமிழக திராவிட மாடலின் மக்கள்  முதல்வர், தமிழகத்தின் சமூக நீதி பாதுகாவலர்
 மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கும் மேதகு ஆளுநர் ஆர்.என் ரவி அவர்களுக்கும்

 உயர் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு க.பொன்முடி அவர்களுக்கும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் சார்பாகவும், என் சார்பாகவும் கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர் முது முனைவரஅழகுராஜா பழனிச்சாமி

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை