தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு தனிசட்டம் கொண்டுவரவேண்டும், அய்யம்பேட்டையில் நடைபெற்ற தகவல் அறியும் சட்ட இலவச பயிற்சியில் வலியுறுத்தல்.
தஞ்சாவூர் மாவட்டம், ஆகஸ்ட் 30
அய்யம்பேட்டையில் தகவல் அறியும் உரிமை சட்ட இலவச பயிற்சி முகாம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்க வட்டார தலைவர் நா.தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்க தலைவர் தெட்சிணாமூர்த்தி, தஞ்சாவூர் வசந்தம் லயன்ஸ் சங்க தலைவர் பால்ராஜ், துவாக்குடி மலை லயன்ஸ் சங்க தலைவர் சவேரியார், தஞ்சை மாவட்ட கிராமப்புற நுகர்வோர் பாதுகாப்பு இயக்க செயலாளர் ஆதிசிவம், தகவல் அறியும் உரிமை சட்ட இயக்க செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். லயன் சங்க மண்டல தலைவர் சிவராஜ் முகாமை துவக்கி வைத்து பேசினார். இதில் தஞ்சை மாவட்ட கிராமப்புற நுகர்வோர் பாதுகாப்பு இயக்க தலைவர் சுந்தரவிமலநாதன், தஞ்சை மாவட்ட தகவல் அறியும் சட்ட இயக்க துணை தலைவர் திருசக்திவேல், ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமை சட்ட பயிற்சி அளித்தனர்.
அப்போது தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு என தனி சட்டம் அரசு கொண்டுவரவேண்டுமெனவும், தகவல் தராத அதிகாரிகள் மீது தகவல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. ஏற்பாடுகளை
அய்யம்பேட்டை டவுன் லயன்ஸ் சங்கம், தஞ்சை மாவட்ட தகவல் அறியும் உரிமை சட்டம் ஆர்வலர்கள் இயக்கம், மற்றும் தஞ்சை மாவட்ட கிராமப்புற நுகர்வோர் இயக்க நிர்வாகிகள் செய்து இருந்தனர். இறுதியில்
மணிகண்டன் நன்றி கூறினார்.