சமூக சிந்தனையாளர் பேராசிரியர்.முது முனைவர்.அழகுராஜா பழனிச்சாமி தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் சார்பாக தமிழக முதல்வருக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார்


நமது ஆகஸ்ட் 11ஆம் தேதி நமதுதின ஜெயம் நாளிதழில் முது முனைவர் அழகுராஜா பழனிசாமி சுதந்திர தினத்தன்று கிராம ஊராட்சிகளில் சாதிய பாகுபாடின்றி  கொடியேற்றுவதற்கு அறிக்கை வெளியிட்டு இருந்தார்

அதனை ஏற்று தமிழ்நாட்டில் 75 ஆவது சுதந்திர தினம் அமுத பெருவிழாவில் தேவேந்திர குல  வேளாளர், பட்டியல் சமுதாயம் மற்றும் பழங்குடியினர் ஊராட்சி மன்ற தலைவர்கள் தேசியக்கொடி ஏற்றுவதை உறுதி செய்ய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தமிழ்நாட்டில்   அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எவ்வித சாதி பாகுபாடு இன்றி தேசிய கொடிய ஏற்ற வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார் 

வரலாற்று சிறப்புமிக்க இந்த உத்தரவு பொதுமக்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது
தமிழகத்தில்உள்ள அனைத்து  தேவேந்திர  குல வேளாளர் ஊராட்சி மன்ற தலைவர்களில் கொடியேற்றும் உரிமையையாரும் தட்டி பறிக்க முடியாது என்று ஆணித்தரமான அரசு உத்தரவு வரவேற்பு பெற்றுள்ளது தேவேந்திரகுல வேளாளர் சார்பாக  மக்கள்முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு  கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.சமூக சிந்தனையாளர் மற்றும் பேராசிரியர்.முது முனைவர்.அழகுராஜா பழனிச்சாமி  தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தின் சார்பாக தமிழக முதல்வருக்கு கோடான கோடி நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறார்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை