தஞ்சை மாவட்டம் பாபநாசம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு இருக்கை வசதி இல்லாததால் பயணிகள் தரையில் அமர வேண்டிய அவல நிலை பேரூராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளுமா


தஞ்சை மாவட்டம், ஆக-22

 பாபநாசம் ரயில் நிலையம் அருகே உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு சாலியமங்களம் மார்க்கம், குடவாசல் மார்க்கம், தஞ்சை மார்க்கம் ஆகிய வழிதடத்தில் இருந்து நகர பேருந்துகள்,மற்றும் சில  புறநகர் பேருந்துகள், மினிபேருந்துகள் ஆகியவை வந்து  பேருந்து நிலையம் வந்து பயணிகளை இறக்கிவிட்டு, பிறகு அங்கிருந்து பயணிகளை ஏற்றி செல்கின்றனர். பேருந்து நிலையத்தில் பயணிகள் அமருவதற்காக உள்ள அறையில் உள்ள இருக்கைகள் பல சேதமடைந்த நிலையில் உள்ளதாலும் போதுமான இருக்கை வசதி இல்லாததால்  
பேருந்து வருகைக்காக காத்திருக்கும் பயணிகள்  தரையில் அமர வேண்டிய அவல நிலை உள்ளது.  ஏற்கனவே பேருந்து நிலையத்தில் பயணிகள் அமருவதற்கு அமைக்கப்பட்டிருந்த இருக்கை வசதிகள் பேருந்து நிலையம்   புதுப்பிக்கும் பணியின்போது அகற்றப்பட்டதால் தற்போது பயணிகள் அமருவதற்கு இருக்கை வசதியில்லாத நிலை உருவாகி உள்ளது.எனவே பேரூராட்சி நிர்வாகம் 
பயணிகள் நலன்கருதி பேருந்துநிலையத்தில்   போதுமான இருக்கைகள் அமைக்கப்படுவதோடு பயணிகள் அமருவதற்காக உள்ள அறையில்  சேதமடைந்த நிலையில் உள்ள இருக்கைகளை அப்புறப்புறப்படுத்தி விட்டு புதியதாக இருக்கைகள் அமைக்கவும், பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விசிறி இயங்காத நிலையில்  உள்ளதால்  மின்விசிறியை  இயக்க வைக்கவும்  அரசு நடவடிக்கை எடுக்கப்படுமா என பொதுமக்கள், பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை