இரும்புதலை வீரனார்கோயிலில் ஆடி சிறப்பு பூஜை
தஞ்சாவூர் மாவட்டம், ஆகஸ்ட் 16
பாபநாசம் தாலுக்கா, இரும்புதலை கீழத்தெருவில் எழுந்தருளியுள்ள வீரனார் கோயிலில் ஆடி மாத சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக கீழத்தெரு வீரனார் கோயில் பரம்பரை குலதெய்வகாரர்கள் சார்பில் சுவாமிக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை கீழத்தெரு வீரனார் கோயில் குலதெய்வகாரர்கள் குடும்பத்தினர் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்