தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியத்தில் கிராமசபா கூட்டங்கள் நடைபெற்றன
தஞ்சாவூர் மாவட்டம் ஆகஸ்ட் 16
அம்மாபேட்டை ஒன்றியத்தில் சுதந்திரதினத்தை முன்னிட்டு கிராமசபாகூட்டங்கள் நடைபெற்றன. சாலியமங்களம் ஊராட்சியில் நடைபெற்ற சிறப்பு கிராமசபாக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சக்திசிவக்குமார் தலைமை வகித்தார்.இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் மதுமதிமணிகண்டன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
அதுபோல இரும்புதலை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற சிறப்பு கிராமசபா கூட்டத்தில் கிராம வரவு. செலவு மற்றும் ஊராட்சியில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சி பணிகள் குறித்த அறிக்கையை ஊராட்சி செயலர் ஜெகத்குரு வாசித்தார்.இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர் வள்ளிவிவேகானந்தன் மற்றும் ஊராட்சிமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.
வடக்குமாங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்திற்கு ஊராட்சிமன்ற தலைவர் கலைச்செல்விகனகராஜ் தலைமையிலும், துணை தலைவர் அப்துல்நாசர் முன்னிலையிலும் நடைபெற்ற கிராமசபா கூட்டத்தில் ஊராட்சியில் நடைபெற்ற பல் வேறு வளர்ச்சி திட்டப்பணிகள், வரவு மற்றும் செவீனங்கள் குறித்த அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதில் ஊராட்சிசெயலர் கார்த்திக் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர். அதுபோல கொத்தங்குடி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பழனி தலைமை வகித்தார். இதில்
ஊராட்சி மன்ற துணை தலைவர், உறுப்பினர்கள், ஊராட்சி செயலர், கிராமமக்கள் மகளிர் சுய உதவிகுழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். ராராமுத்திரகோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபா கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சோழன் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற துணை தலைவர் புனிதா பிரகலாதன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கிராமமக்கள் பலர் கலந்து கொண்டனர். காவலூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் தலைமையில் கிராமசபா கூட்டம் நடைபெற்றன. இந்த கூட்டத்தில் ஊராட்சியின் வரவு, செலவு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த அறிக்கை வாசிக்கப்பட்டது. இதில் கிராமமக்கள், மகளிர் சுய உதவிகுழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவையாத்துக்குடி ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் வெண்ணிலாதர்மராஜ் தலைமையில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் ஊராட்சி துணை தலைவர், உறுப்பினர்கள் ஊராட்சி செயலாளர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.