பாபநாசம் வீரமாகாளியம்மைக்கு ஆடிப்பூர வளையல்காப்பு நிகழ்ச்சி ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சாவூர் ஆகஸட் .2
தஞ்சை மாவட்டம், பாபநாசம், 108 சிவாலயம் அருள்மிகு வீரமா காளியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளையகாப்பு அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக வீரமாகாளியம்மனுக்கு வளையல் அணிவிக்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பெண்கள் பூ, பழங்கள், புடவை உள்பட சீர்வரிசை தட்டு, தாம்பலம், எடுத்து வீதியுலா வந்தனர். அதனை தொடர்ந்து வீரமா காளியம்மனுக்கு வளையல் காப்பு அணிவிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வங்காரம்பேட்டை பரணிதரன் குடும்பத்தினர்,மற்றும் கோயில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து செய்திருந்தனர்.