தஞ்சை மாவட்டம் வடக்குமாங்குடி அருகே உள்ள அரசு மதுபான கடையை மூடவேண்டும் பாபநாசம் எம்எல்ஏவிடம் கோரிக்கை மனு
தஞ்சை மாவட்டம். ஆகஸ்ட் 30
பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி ஜமாத் தலைவர்பஷீர் அஹமது, தமிழ்நாடுதவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் முகமது ரபீக், முகமது இக்பால், ஊராட்சிமன்ற தலைவர் கலைச்செல்விகனகராஜ் மற்றும் கிராமவாசிகள் பாபநாசம் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது
வடக்குமாங்குடி கிராமமக்களுக்கு பெரும் இடையூறாகவும், விவசாய நிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில்
வயல்வெளி நடுவே சரபோஜிராஜபுரம் ஊராட்சி எல்லையில் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மதுபான கடையால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதோடு,மது அருந்துவோர் காலி மதுபான பாட்டில்களை விவசாய நிலங்களில் வீசிவிட்டு செல்வதால் விவசாய நிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.